பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 127

தெளிவாய் அறியக்கூடிய ஞானமும், அதனால் விளையக்கூடிய பல
வரங்களும் தந்து, உய்வு பெறும் வழியையும் சேர்த்துத் தந்த தன்மையை
ஊமையாகிய நான் உரைக்க இயலுமோ?

     எந்தை - என் தந்தை என்ற தொடரின் மரூஉ.

 
            104
வளர்ந்தவெண் மதிதேய்ந் தன்ன
     வளங்கொடு பிறந்த பின்னா
னுளர்ந்தகண் ணருவி யோட்டி
     யுலந்தெனை யீன்றோன் மாளாக்
கிளர்ந்தவெம் பகையைக் கொன்னே
     கிளைத்தகோன் கொடுமைக் கஞ்சித்
தளர்ந்தமெய் யவலித் தென்னைத்
     தாயுமிவ் வனத்தி லுய்த்தாள்.
 
''வளர்ந்த வெண் மதி தேய்ந்து அன்ன, வளம் கொடு பிறந்த
                              பின் நான்,
உளர்ந்த கண் அருவி ஓட்டி உலந்து எனை ஈன்றோன் மாள,
கிளர்ந்த வெம் பகையைக் கொன்னே கிளைத்த கோன்
                              கொடுமைக்கு அஞ்சித்
தளர்ந்த மெய் அவலித்து என்னைத் தாயும் இவ்வனத்தில்
                              உய்த்தாள்.

     ''இத்தகைய வளங்களோடு நான் பிறந்தபின், வளர்ந்த வெண்ணிலா
தேய்ந்த தன்மைபோல என்னைப் பெற்ற தந்தை முதுமையால் உடல் கெட்டு,
என் கண் சொரிந்த நீர் அருவிபோல் ஓடச் செய்து மாண்டான். பின்,
பொங்கிய கொடும் பகையை வீணே ஆண்டவன் மீது படரவிட்ட எரோது
மன்னனின் கொடுமைக்கு அஞ்சித் தளர்ந்த மெய்யோடு வருந்திய என்
தாயும் என்னை இவ்வனத்திற் கொண்டு சேர்த்தாள்.

 
          105
நீட்டிடை நெறிக ணீக்கி
     நீரிடை மலர்ந்த கஞ்சத்
தேட்டிடை யன்ன மன்ன
     வீன்றனள் கரத்தில் வைகிக்