பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 129

          107
விரிந்தன கொம்பிற் கொய்த
     வீயென வுள்ளம் வாட
வெரிந்தன நுதிநச் சம்புண்
     டிரும்புழைப் புண்போ னோகப்
பிரிந்தன புள்ளிற் கானிற்
     பெரிதழு திரங்கித் தேம்பச்
சரிந்தன வசும்பிற் செல்லுந்
     தடமிலா தனித்தே னந்தோ.
 
''விரிந்தன கொம்பில் கொய்த வீ என உள்ளம் வாட,
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழைப் புண் போல் நோக,
பிரிந்தன புள்ளின் கானில் பெரிது அழுது இரங்கித் தேம்ப,
சரிந்தன அசும்பில் செல்லும் தடம் இலா தனித்தேன், அந்தோ!

     ''ஐயோ! தான் விரிந்து நின்ற கொம்பினின்று கொய்யப்பட்ட
மலர்போல் என் மனம் வாடவும், எரியும் தன்மை வாய்ந்த தன் நுனியில்
நஞ்சைக் கொண்ட அம்பினால் அடியுண்டு பெரிய துளை பட்ட
புண்ணைப்போல் நான் நோகவும், துணையைப் பிரிந்த பறவை போல்
இக்காட்டில் பெரிதும் அழுது இரங்கித் தேம்பவும், சரிவான வழுக்கு
நிலத்தில் செல்லும் தடமும் தெரியாத தன்மையாய் நான் தனிப்படலானேன்.

     'விரிந்தன' என்பது போன்று நான் கிடத்தும் இடையே 'அன்'
சாரியை.

 
            108
துள்ளிவா ழுழைகாள் கொம்பிற்
     றுன்னி வாழ் குயில்காள் தூய்தே
னள்ளிவா ழளிகாள் தேன்கா
     ளழனிறக் கமலப் பைம்பூம்
பள்ளிவா ழோதி மங்காள்
     பறித்துவாழ் கொடிகாள் கோற
லுள்ளிவாழ் வரிகாள் சொன்மி
     னுயிர்தனித் தலிற்றீ துண்டோ.