பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 134

மையொடு வளர்பொன் னாசை
     வழித்துணை யாசை யென்னப்
பொய்யொடு பொங்கு பற்றல்
     புரைபுகுத் தரிய வாறே.
 
''மொய்யொடு கடுத்த கோபம் கதிர் அற நீதி என்ன,
மெய்யொடு விளைந்த காமம் விழு மனக் கேண்மை என்ன,
மையொடு வளர்பொன் ஆசை வழித்துணை ஆசை என்னப்
பொய்யொடு பொங்கு பற்றல் புரை புகுத்து அரிய ஆறே.

     ''போரும் கடுத்த சினமும் முதிர்ந்த அறநெறிப்படி அமைந்த நீதிமுறை
எனவும், உடலோடு விளைந்த காமம் சிறந்த இரு மனங்களிடையே அமைந்த
நட்புறவு எனவும், குற்றத்தின் அடிப்படையில் வளரும் பொன்னாசை
வாழ்க்கைக்கு வழித்துணையாக அமைந்த ஆசை எனவும், இவ்வாறெல்லாம்
பொய்யின் அடிப்படையில் பொங்கி எழும் பற்று மனிதரிடத்துப் பாவத்தைப்
புகுத்தும் அரிய வழியாகும்.

 
                      115
இன்னவா றொருவ னானே
     யிடறிலா தொழுகும் பாலோ
துன்னவா றிடறி வீழ்ந்தாற்
     றுணைவனின் றெடுத்துப் பின்றா
தன்னவா றொழுக வென்றோ
     ரருங்குரு விலநிற் பேனோ
வென்னவா றொழுகு வெள்ளத்
     திளமுனி யழுது சொன்னான்.
 
''இன்ன ஆறு ஒருவன் நானே இடறு இலாது ஒழுகும் பாலோ,
துன்ன ஆறு இடறி வீழ்ந்தால் துணைவன் நின்று எடுத்து, 'பின்றாது
அன்ன ஆறு ஒழுக,' என்று ஓர் அருங் குரு இல நிற்பேனோ?''
என்ன ஆறு ஒழுகு வெள்ளத்து இள முனி அழுது சொன்னான்.