| 117 |
பனிமதி
பொழிந்த கற்றை
பருகிய
வாம்பல் போலத்
தனிமதி துய்த்த நெஞ்சிற்
றான்றனை
நம்பாத் தன்மை
துனிமதித் தயர்ந்த தல்லாற்
றுணிவறா
வயிரக் குன்றாய்
முனிமதிக் குழவி சோர்ந்து
முளரிமேற்
றுயில்கின் றானே. |
| |
பனி மதி பொழிந்த
கற்றை பருகிய ஆம்பல் போல,
தனி மதி துய்த்த நெஞ்சின், தான் தனை நம்பாத் தன்மை,
துனி மதித்து அயர்ந்தது அல்லால், துணிவு அறா வயிரக் குன்றாய்
முனி மதிக் குழவி சோர்ந்து முளரிமேல் துயில்கின்றானோ. |
குளிர்ந்த
மதி பொழிந்த கதிர்க் கற்றையைப் பருகிய அல்லி மலர்
வாடுதல் போல், தனது ஒப்பற்ற அறிவினால் நுகர்ந்த நெஞ்சத்தால்,
தன்னையே தான் நம்பாத தன்மையாக, தனக்கு நேரக் கூடிய பாவமாகிய
துன்பத்தை நினைந்து அயர்ந்ததேயல்லாமல், தன்னளவில் எப்பாவத்திற்கும்
இடந் தராத துணிவு நீங்காத வைரக் குன்று போல், ஒரு முனிவனுக்குரிய
அறிவு படைத்த குழந்தையாகிய கருணையன் சோர்ந்து கரையிற் கிடந்த
தாமரை இலைகளின் மேல் படுத்துத் துயில்கின்றான்.
ஆம்பல்
இருவகை : (1) செவ்வாம் பல் : அல்லி என்ற பெயரோடு
பகல் மலர்ந்து இரவு கூம்புவது; (2) வெள்ளாம் பல் : குமுதம் என்ற
பெயரோடு இரவு மலர்ந்து பகல் கூம்புவது.
குழந்தை
நாதன் தூதுரை
-
விளம், - விளம், - மா, கூவிளம்
| 118 |
படம்புனைந்
தெழுதிய பாங்கிற் பங்கயத்
தடம்புனைந் திளமுனி சாற்று கின்றெலாம்
வடம்புனைந் தெனப்புனை மறைநல் லோரெசித்
திடம்புனைந் திருளற வுணர்ந்தி ரங்கினார். |
|