''பேர்ந்த பூ
கரையின் மேல் வாடும் பெற்றியால்,
ஆர்ந்த பூந் தடம் கரைக்கு அயர்ந்து துஞ்சி, உள்
கூர்ந்த நோய் அலைவு கொள் குழவி தன்மையில்
தேர்ந்த மாமுனி மனம் தேற்றச் செல்மினே. |
''குழந்தையின்
தன்மையாக வெளியே காணப்பட்டாலும் உள்ளத்தில்
தேர்ந்த பெரிய முனிவனாகிய கருணையன், தடாகத்தினின்று பிரிந்த பூ
கரைமேற்கிடந்து வாடும் தன்மைபோல் பூக்கள் நிறைந்த தடாகத்தின்
கரையில் அயர்ந்து தூங்குகிறான். தன் உள்ளத்தில் மிகுந்த துன்பத்தினால்
அலைக்கழிக்கப்படும் அவன் மனத்தைத் தேற்றச் செல்லுங்கள்.
கரைக்கு
- 'கரையில்' என ஏழாம் வேற்றுமை நான்காம்
வேற்றுமையாக மயங்கி வந்தது.
| 121 |
அறவினா விளைத்தநல்
லாசை யாலுளந்
துறவினா லுயரிய விரதஞ் சூழ்ந்தபின்
னறவினா லலர்ந்தபூ முறுக்கி நைந்தென
வுறவினா சையினயர்ந் துளைவ தேதென்பீர். |
| |
''அறவினா விளைத்த
நல் ஆசையால், உளம்
துறவினால் உயரிய விரதம் சூழ்ந்த பின்,
நறவினால் அலர்ந்த பூ முறுக்கி நைந்தென,
உறவின் ஆசையின் அயர்ந்து உளைவது ஏது என்பீர். |
''அறத்தைப்
பற்றிய கேள்வி விளைவித்த நல்ல ஆசையால் தூண்டப்
பெற்று, மனம் துறவினால் உயர்வு பெறுகின்ற விரதத்தை ஆராய்ந்து ஏற்றுக்
கொண்ட பின் தேனோடு மலர்ந்த பூ முறுக்கியதனால் நைந்ததுபோல,
உறவினர்பாலுள்ள ஆசையால் அயர்ந்து வருந்துவதற்கு இடம் ஏது என்று
அவனுக்குச் சொல்லுங்கள் :
| 122 |
செருக்கிடைக்
கோடுளஞ் சிதைக்கு மைம்பொறிப்
பெருக்கிடப் பெருபகை பெறுமி யாக்கையை
முருகிடைத் துறவற முயற்சி வேண்டுவர்
நெருக்கிடைத் தோலுரித் தரவு நேருவார். |
|