| 124 |
உருத்துணை
பொன்மணி புணர்ச்சி யோதுணர்
மருத்துணை மலர்தலோ குருவன் வாய்த்துணை
கருத்துணை புரையொடு சனித்த காலையிற்
குருத்துணை யிலாயினான் குருட னாயினான். |
| |
|
''உருத் துணை
பொன் மணி புணர்ச்சியோ, துணர்
மருத் துணை மலர்தலோ குருவன் வாய்த் துணை;
கருத் துணை புரையொடு சனித்த காலையில்
குருத் துணை இல் ஆயினான் குருடன் ஆயினான்'
|
கருணையன், 'குருவின் வாய்ச் சொல்லால் ஒருவன் பெறும் துணை
ஓர் அணிகலனை உருவாக்கத் துணை புரிகின்ற பொன்னும் அதனிற்பதித்த
மணியும் முறையாய்ச் சேர்ந்த தன்மை போலவோ பூங்கொத்து மணத்தையும்
உடன் கொண்டு மலர்தல் போலவோ சிறந்ததாகும்; எனவே, தாயின் கருவில்
பாவத்தை உடன் கொண்டு உருவாகிய நேரந் தொட்டுத் தனக்கென்று ஒரு
குருவின் துணையைப் பெறாதவன் குருடனுக்கு ஒப்பாவான்'' என்று
சொல்வனாயினான்.
| 125 |
என்பவ னாயினா
னெனினுங் கூருளத்
தின்பவ னுயிர்த்தெழ விதயத் தாண்டறா
வன்பவ னுணர்வின்மே லியற்ற வாண்டகை
பின்பவன் குருத்துணை பெறலு நேடவோ. |
| |
என்பவன் ஆயினான்.
எனினும், கூர் உளத்து
இன்பு அவன் உயிர்த்து எழ இதயத்து ஆண்டு, அறா
அன்பு அவன் உணர்வின் மேல் இயற்ற ஆண்டகை,
பின்பு அவன் குருத் துணை பெறலும் நேடவோ? |
எனினும்,
தன் கூர்மையான உள்ளத்தில் அவன் இன்பம் நுகர்ந்து
எழுச்சி பெறுமாறு இதயத்துள் நின்று ஆண்டு, அவன் உணர்வினுள்
இடையறாத அன்பை ஆண்டவனே பொழிந்துள்ளான். அதன் பின் அவன்
தனக்கு வேறொரு குருவின் துணையைப் பெறுதலும் தேடுதலும்
வேண்டுமோ?
இறைவனே
குருவாக உள்ளிருந்து ஆளுகையில், புறத்தே வேறொரு
குரு தேவையில்லை என்பது கருத்து. 'உருத்துணை........ குருடனாயினான்''
என்பது கருணையன் கூற்றைக் குழந்தை நாதன் கொண்டு கூறியதாகும்.
|