| 126 |
போதுவாய்
மதுவெனப் பொலிந்த சூலணி
மாதுவா யிருந்தபோ துணர்ந்த வான்கலை
காதுவா யுரைப்பவோர் குருக்கண் டான்கொலன்
றோதுவாய் மலர்ந்தவ னின்று மோதுவான். |
| |
''போதுவாய்
மது எனப் பொலிந்த சூல் அணி
மாதுவாய் இருந்த போது உணர்ந்த வான் கலை
காதுவாய் உரைப்ப ஓர் குருக் கண்டான் கொல்? அன்று
ஓது வாய் மலர்ந்தவன் இன்னும் ஓதுவான். |
''மலரின்
உள் அமைந்த தேன் போல அழகிய கருப்பம் தாங்கிய
பெண்ணின் வயிற்றுள் இருந்தபோது அக்கருணையன் உணர்ந்து கொண்ட
வானக வாழ்க்கைக் கலையைத் தன் காதுக்குள் உரைக்கத்தக்க வேறொரு
குருவை அவன் கண்டானோ? அந்நாளில் அவனுக்குத் திருவாய் மலர்ந்து
ஓதிய ஆண்டவனே இன்று அவனுக்கு நெஞ்சினுள் ஓதுவான்.
காதினுள்
ஓதும் குருவைக் காணான் எனவே, ஆண்டவன் ஓதுவது
நெஞ்சினுள் என்பது பெறப்பட்டது. 'கண்டானோ' என்ற இறந்த காலம்,
காணுதல் அரிதென்பது உணர்த்தியது.
| 127 |
உள்ளுறத்
திருவுள மிதுவென் றோர்ந்தபின்
றெள்ளுறத் தேற்றுரை செப்பல் வேண்டுமோ
வள்ளுறப் பொலிவயத் தணிந்த தேவருட்
கெள்ளுறத் தோன்றிய விடுக்க ணேதென்பீர். |
| |
|
''உள் உறத்
திரு உளம் இது என்று ஓர்ந்த பின்
தெள் உறத் தேற்று உரை செப்பல் வேண்டுமோ?
அள் உறப் பொலி வயத்து அணிந்த தேவ அருட்கு
எள் உறத் தோன்றிய இடுக்கண் ஏது என்பீர்.
|
''இறைவன்
திருவுளம் இது என்று உள்ளூர உணர்ந்த பின், தெளிவு
பெற வேறொருவன் வந்து தேற்று மொழி சொல்ல வேண்டுமோ?
|