|
நிறைவுறப் பொலிந்த
வலிமையாக அணிந்துள்ள தெய்வ அருளுக்கு எதிராக
அதனை இகழ்வது போல் வந்து தோன்றும் துன்பம் எது என்று அவனிடம்
கேளுங்கள்.
| 128 |
தான்றன தென்றிரு
தகுதிப் பற்றலு
நோன்றன வடற்கொடு நூக்கி வானுயர்
கோன்றன தருணிலை சார்த்த கொள்கையி
லான்றன மதுகைமூ வுலகு மாட்டுமே. |
| |
|
''தான், தனது
என்று இரு தகுதிப் பற்றலும்
நோன்றன அடல் கொடு நூக்கி வான் உயர்
கோன் தனது அருள் நிலை சார்ந்த கொள்கையில்
ஆன்றன மதுகை மூ உலகும் ஆட்டுமே.
|
''தான்,
தனது என்ற இரு வகைப் பற்றுக்களையும் நோன்பு
கடைப்பிடித்த வலிமையால் அழித்து, உயர்ந்த வானுலக அரசனாகிய
ஆண்டவனின் அருள் நிலையைச் சார்ந்து நிற்கும் கொள்கையால் அமைந்த
வல்லமை மூன்று உலகங்களையுமே ஆட்டி அசைக்கும்.
தான்
- தானே பெரியவன் என்ற அகந்தை, தனது - தனக்கு உரியது
என்ற ஆசை. நோன்றன, ஆன்றன - ஈரிடத்தும் இடையே 'அன்' சாரியை.
| 129 |
நிரையெலா
நயனடைக் கடலி னீர்மையாற்
றிரையிலா நிலையுடைத் தேவ மார்புழி
மரையெனா மலர்ந்தன மனந்து யின்றிடப்
புரையிலா வாழ்கெனப் புகன்மி னீரென்றான். |
| |
''நிரை எலா
நயன் அடைக் கடலின் நீர்மையால்,
திரை இலா நிலை உடைத் தேவ மார்புஉழி
மரை எனா மலர்ந்து, அன மனம் துயின்றிடப்
புரை இலா வாழ்க எனப் புகல்மின் நீர்,'' என்றான். |
''எல்லா
நலங்களும் தொகுதியாகக் கொண்டு அடைத்த கடலின்
தன்மையாய், அக்கடல் போன்று திரையால் அலைக்கப் படாது
நிலைபெறுதல் உடைய கடவுளின் மார்பில் ஒரு தாமரை மலர் போல்
மலர்ந்து, மேற் கூறியவாறெல்லாம் அலைக்கப்படுகின்ற மனம் அமைதியாகத்
துயில் கொண்டும் குற்றம் இல்லாமலும் வாழ்வாயாக என்றும் நீங்கள்
சொல்லுங்கள்'' என்றான்.
|