|
தான்
சிறு பாலனாய் இருந்தும், தவம் மேற்கொள்ள விரும்பியவர்க்
கெல்லாம் விளக்குப் போன்றவனாகிய கருணையன் பேரீந்து இலைகளால்
பின்னிய ஆடையால் உடல் மறைய மேல் உடுத்து, மெல்லிய தாமரையின்
பசுமையான இதழ்கள் பரவிக் கிடந்த தரையின்மேல் படுத்துத் தூங்கிக்
கொண்டிருந்தான்.
பாசிதழ்
- பசுமை + இதழ். 'பாசிதழ்' என்றாரேனும், தரையிற் பரவிக்
கிடந்தமையால் இதழ்ச் சருகுகள் என்று கொள்க. 'அரோ' என்பது அசை.
| 136 |
விழுந்தன
கதிர்த்திரள் விழிகள் கூசவுள்
ளழுந்தின வெருவுறீஇ யயிர்ப்பொ டையெனா
வெழுந்தனன் சொல்லுமின் வந்த தென்றுபின்
றொழுந்தன திருகரங் குவித்துத் தோன்றினான். |
| |
|
விழுந்தன கதிர்
திரள் விழிகள் கூச, உள்
அழுந்தின வெரு உறீஇ, அயிர்ப்பொடு ஐ எனா
எழுந்தனன்: ''சொல்லுமின் வந்தது!'' என்று, பின்
தொழும் தனது இரு கரம் குவித்துத் தோன்றினான்.
|
தன்
மீது விழுந்த கதிர்த் திரள்களால் கண்கள் கூச, உள்ளத்தில்
அழுந்தின அச்சம் கொண்டு, அவை எங்கிருந்து வந்தன என்ற ஐயத்தோடு
கருணையன் திடுக்கிட்டு எழுந்தான். ஒளியினிடையே உருவங்களைக் கண்டு
பதறி, ''வந்த காரியத்தைச் சொல்லுங்கள்!'' என்றான். பின், வானவரென்று
தெளிந்து, தொழுத தன்மையாய்த் தன் இரு கைகளையும் குவித்த வண்ணம்
நின்றான்.
ஐ
- விரைவுக் குறிப்பு. ஐயெனல் - திடுக்கிடுதல். உறீஇ - உற்று.
| 137 |
மூவரு முணர்த்திய
வுறுதி முற்றவுந்
தூவரு முணர்வினோன் செவியிற் றுய்த்தபின்
மேவருங் கருணையாள் விருந்து துய்த்துளந்
தேவருந் தெளிவொளி துய்த்துத் தேறினான். |
|