|
வானவர் : வானவர்
தொழும் இவ்வரசனை நினைந்து, நன்னெறி பிறழாது
நடந்து, இவ்வுலகில் அவனைத் தொழும் சிந்தையுள்ளோர் இங்கு எக்கேடும்
அடையார்.
| 141 |
பானேரா வருட்கடலின்
பதுமமென நான்வாழத்
தானேரா விடுக்கணுறீஇத் தயையுணர்வின் மிக்கோனே
தயையுணர்வின் மிக்கோனைத் தவிர் நசையைத்
தவிர்ந்துயர்ந்தோ
ரியையுணர்விற் பிறழாதா ரீங்கிழிவு நண்ணாரே. |
| |
பால் நேரா அருட்
கடலின் பதுமம் என நான் வாழத்
தான் நேரா இடுக்கண் உறீஇ, தயை உணர்வின் மிக்கோனே
தயை உணர்வின் மிக்கோனைத் தவிர் நசையைத் தவிர்ந்து
உயர்ந்தோர்
இயை உணர்விற் பிறழாதார் ஈங்கு இழிவு நண்ணாரே. |
கரு
: பாலும் நிகராகாத திருவருட் கடலில் தாமரை போல நான்
வாழ்வு பெறும்படி ஆண்டவன் தானே நிகரில்லாத துன்பங்களுக்கு
ஆளானான். அவன் அத்தகைய தயை உணர்வு மிக்கவன் ஆவான்.
வா
: அத்தகைய தயை உணர்வு மிக்கவனாகிய ஆண்டவனை
இழப்பதற்குக் காரணமான ஆசையை ஒழித்து உயர்ந்தோராய், அவன்மாட்டு
இயைந்த அன்புணர்விற் பிறழாதவராய் வாழ்வோர் இவ்வுலகில் எக்கேடும்
அடையார்.
| 142 |
விண்கனிய
விண்ணுறைந்தோன் விளைத்தவரு ளுளந்தூண்ட
மண்கனிய மனுவாகி மணிக்கலந்தேந் தமுதன்னோன்
மணிக்கலத்தேந் தமுதன்னோன் மதிக்குடைக்கீ
ழொதுங்கினரன்
பணிக்கலத்தேந் தடிபெயரா ரீங்கிழிவு நண்ணாரே. |
| |
|
விண் கனிய
விண் உறைந்தோன் விளைத்த அருள் உளம் தூண்ட
மண் கனிய மனு ஆகி, மணிக் கலத்து ஏந்து அமுது அன்னோன்.
மணிக் கலத்து ஏந்து அமுது அன்னோன் மதிக் குடைக் கீழ்
ஒதுங்கினார்,
அன்பு அணிக் கலத்து ஏந்து அடி பெயரார் ஈங்கு இழிவு நண்ணாரே.
|
|