| 150 |
நெடிது நேடிய
நீரிய தோர்பொருள்
கடிது காண்டலுங் காதல் களித்தென
நொடிது தைந்தநு ணங்கிய நோக்கறா
தடிது தைந்தவ கத்தரி தோங்கினான். |
| |
நெடிது நேடிய நீரியது
ஓர் பொருள்
கடிது காண்டலும் காதல் களித்தென,
நொடி துதைந்த நுணங்கிய நோக்கு அறாது,
அடி துதைந்த அகத்து அரிது ஓங்கினான். |
நெடு
நாள் தேடிய சிறந்ததொரு பொருளைத் திடீரெனக் கண்டதும்
அன்பினால் மகிழ்வது போல, ஒரு நொடிப் பொழுதில் தன் உள்ளத்தில்
தோய்ந்த நுணுகிய பார்வையை அவன் விலக விடாமல், ஆண்டவனின்
திருவடி தோய்ந்த தன் மனத்துள் அரியதோர் எழுச்சி கொண்டான்.
| 151 |
மின்னின்
மின்னிய வேள்வியின் றீயெனா
வன்னி மின்னிவ வாண்முகந் தண்ணமே
துன்னி மின்னிய தூயுளந் தீச்சுடர்
முன்னின் மோயிசன் காண்மர மொத்ததே. |
| |
|
மின்னின் மின்னிய
வேள்வியின் தீ எனா
வன்னி மின்னிய வாள் முகம், தண்ணமே
துன்னி மின்னிய தூய் உளம் தீச்சுடர்
முன்னின் மோயிசன் காண் மரம் ஒத்ததே.
|
மின்னல்
போல் மின்னிய வேள்வித் தீ போல நெருப்பு மயமாய்
மின்னிய ஒளி பொருந்திய முகத்தோடு, குளிர்ச்சி செறிந்து உள்ளே மின்னிக்
கொண்டிருந்த கருணையனின் தூய்மையான உள்ளம் முன் ஒரு காலத்தில்
மோயிசன் தீச்சுடரைக் கண்ட மரத்தை ஒத்திருந்தது.
மோயிசன்
கண்ட மரம் : ப. ஏ. யாத். 3 : 1 - 6 காண்க. அம்மரம்
நெருப்புப் பற்றியும் எரியாமைபோல், கருணையனும் முகம் நெருப்பு மயமாய்
ஒளிர உள்ளங் குளிர நின்றான். 'மரம்' என்றாரெனினும், மூல நூலிற்
கண்டது செடியென்று கொள்க.
|