| 154 |
ஓம்பு
கின்றவி ருந்துள நாடொறுஞ்
சாம்பு கின்றவிண் ணோர்தரத் தாமரை
கூம்பு கின்றக ரத்தொடு கொண்டுணக்
காம்பு கின்றவு டல்கனி வாழுமால் |
| |
ஓம்புகின்ற விருந்து
உள நாள் தொறும்
சாம்புகின்ற விண்ணோர் தர, தாமரை
கூம்புகின்ற கரத்தொடு கொண்டு உண,
காம்புகின்ற உடல் கனி வாழும் ஆல். |
உடலைப்
பேணக் கூடிய விருந்தாய் உள்ளவற்றை, அவன் வாடக்
கண்டு தாமும் வாடுகின்ற விண்ணோர் மரியாளிடம் பெற்றுக் கொணர்ந்து
நாள் தோறும் தருவர். அவ்வாறு தந்த உணவைக் குவிந்த தாமரை போன்ற
கையால் பெற்றுக்கொண்டு உண்பதனால், அவனது மெலிகின்ற உடல்
இன்பமாக வாழும்.
கருணையனைப்
பற்றிய முன்னறிவிப்பு
| 155 |
இனைய யாவையு
மின்பெழக் காண்டலு
நனைய ளாவிய வாகைந றுந்தவன்
புனைய வாவுளந் தூண்டிய பொம்மலாற்
றனைய னாயின நாதனைச் சாற்றினான். |
| |
இனைய யாவையும்
இன்பு எழக் காண்டலும்
நனை அளாவிய வாகை நறுந் தவன்
புனை அவா உளம் தூண்டிய பொம்மலால்
தனையன் ஆயின நாதனைச் சாற்றினான்: |
மேற்
கூறியவாறு நிகழ்ந்த யாவற்றையும் தேன் அளாவிய மலர்க்
கொடி நறுமணம் பரப்பும் தவ முனிவனான சூசை இன்பக் காட்சியாகக்
கண்டான். கண்டதும், கருணையன்மீது பொருந்திய ஆசை உள்ளத்தைத்
தூண்டிய அன்பினால் தனக்கு வளர்ப்பால் மகனான ஆண்டவனை
நோக்கிப் பின்வருமாறு சொல்லலானான் :
|