பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 158

         158
கோதணிந்த வுளங்கோடிக்
     கோடா நிற்குங் கூவுலகந்
தீ தணிந்த துயர்தீர்ப்பப்
     பிறந்தே னானென் றிருமுகத்திற்
றூதணிந்த தவவடிவாய்
     வழிதான் முன்னித் துடைப்பதற்கே
போதணிந்த வனம்வைகு
     மவனைத் தேர்ந்தேன் பொறிவென்றோய்.
 
''கோது அணிந்த உளம் கோடிக் கோடா நிற்கும் கூ உலகம்
தீது அணிந்த துயர் தீர்ப்பப் பிறந்தேன் நான். என் திரு முகத்தின்
தூது அணிந்த தவ வடிவாய் வழி தான் முன்னித் துடைப்பதற்கே
போது அணிந்த வனம் வைகும் அவனைத் தேர்ந்தேன், பொறி
                                          வென்றோய்!

     ''ஐம்பொறிகளையும வென்று அடக்கியவனே, பாவத்தைக்
கொண்டுள்ள மனம் மாசற்ற தன்மையால் வாக்கும் செயலும் கூடவே கோணி
நிற்கும் இம்மண்ணுலகம் மென்மேலும் தீமையையே அணிந்து கொள்கிறது;
அதனால் ஏற்படும் துயரத்தைத் தீர்த்து மனிதரை மீட்குமாறு நான்
பிறந்துள்ளேன். மலர்கள் நிறைந்துள்ள காட்டில் தங்கியிருக்கும்
கருணையனை என் திரு முகத்தின் தூது மேற்கொண்ட தவ வடிவமாய்,
தானே முன் சென்று என் வழியைத் துடைத்து ஆயத்தஞ் செய்வதற்கென்று
நானே தேர்ந் தெடுத்துள்ளேன்.

     கோடா - கோடி : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்;
உடன்பாடு. கருணையன் தூதரை : பு. ஏ., அரு. 1 : 19 - 37 காண்க.

 
              159
''இனஞ்சேர்ந்தா ரினஞ்சேர்ந்த
     விழிவுஞ் சேர்வா ரென்றருளை
மனஞ்சேர்ந்தாய் வடுச்சேராக்
     குழவி தானென் மனப் பணியால்