பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 159

வனஞ்சேர்ந்தா னங்கணென
     தருளங் கைமேல் வளர்ந்தன்னான்
புனஞ்சேர்ந்தார் கனித்தருவின்
     பொலிசை மிக்கோன் பொலிவானே.
 
''இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று,
                                   அருளை
மனம் சேர்ந்து ஆய் வடுச் சேராக் குழவி தான் என் மனப்
                                   பணியால்
வனம் சேர்ந்தான், அங்கண் எனது அருள் அங்கை மேல்
                                   வளர்ந்து அன்னான்
புனம் சேர்ந்த ஆர் கனித் தருவின் பொலிசை மிக்கோன்
                                   பொலிவானே.

     ''இழிவு கொண்ட இனத்தைச் சேர்ந்து இருப்போர், தாம்
இழிவில்லாதவராயினும், தம் இனத்தாரைச் சேர்ந்த இழிவைத் தாமும்
அடைவார். எனவே, தெய்வ அருள் தன் மனத்திற் சேரப் பெற்று, வருத்தம்
தரும் பாவக் கறை ஒன்றும் தன்னைச் சேராத அச் சிறுவன் என் திருவுளக்
கட்டளையால், தன் இனத்தாரைப் பிரிந்து, காட்டை அடைந்தான். அங்கு
எனது அருளாகிய உள்ளங்கைக்குள் அவன் வளர்ந்து, கொல்லையில்
வளர்ந்த நிறை கனியுள்ள மரத்தைக் காட்டிலும் ஆன்ம செல்வம்
மிக்கவனாய்ப் பொலிவு பெறுவான்.

 
                  160
மீன்கறிகற் றொளிவேற்கஞ்
     சிலகா னின்று வெளிப்பட்ட
வூன்கறிகற் றரியன்ன
     தவத்தின் மிக்கோ னுலகஞ்சத்
தேன்கறிகற் றிமிர்வண்டார்
     வனத்தி னின்று செழுஞானந்
தான்கறிகற் றுமிழ்ந்தென்னத்
     தவறா நீதிச் சால்புரைப்பான்.
 
''மீன் கறி கற்ற ஒளி வேற்கு அஞ்சு இல கான் நின்று
                                வெளிப்பட்ட
ஊன் கறி கற்ற அரி அன்ன தவத்தின் மிக்கோன் உலகு
                                அஞ்ச,
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தினின்று, செழு
                                ஞானம்
தான் கறி கற்று உமிழ்ந்து என்னத் தவறா நீதிச் சால்பு
                                உரைப்பான்.