|
''தவத்தில்
மிக்க கருணையன் விண்மீனின் ஒளியை உண்ணக் கற்ற
ஒளி பொருந்திய வேலுக்கு அஞ்சாமல் காட்டினின்று வெளிப்படுவதும் ஊன்
உண்ணப் பழகியதுமான சிங்கம் போல, உலகம் தன்னைக் கண்டு
அஞ்சுமாறு ஒரு நாள் வெளிப்படுவான், தேனை உண்ணக் கற்று ஒலிக்கின்ற
வண்டுகள் நிறைந்த வனத்தினின்று வெளிப்படுவான். வெளிப்பட்டு,
செழுமையான தெய்வ ஞானத்தைத் தான் உண்ட தன்மையாய்க் கற்று
மீண்டு அதனை உமிழ்ந்தது போல, உலகத்தவர்க்குத் தவறாத நீதியின்
மேன்மையை எடுத்துரைப்பான்.
| 161 |
சொல்லாரு
மலர்சிந்துங்
குன்றத்
துச்சி துறந்தோடி
வில்லாருந் திரைசிந்து
சோர்தா
னென்னும் வெண்ணதிக்கண்
ணெல்லாரு முய்வழியைக்
காட்ட
நான்வந் தியைந்தநிலை
கல்லாருங் கற்றுய்ய விரலா
லென்னைக்
காட்டுவனால். |
| |
''சொல் ஆரும்
மலர் சிந்தும் குன்றத்து உச்சி துறந்து ஓடி,
வில் ஆரும் திரைசிந்து சோர்தான் என்னும் வெண் நதிக் கண்
எல்லாரும் உய் வழியைக் காட்ட நான் வந்து இயைந்த நிலை
கல்லாரும் கற்று உய்ய விரலால் என்னைக் காட்டுவன் ஆல். |
''மரங்கள்
புகழ்ச் சொல் நிறைந்த மலர்களைச் சொரியும்
மலையுச்சியை நீங்கித் தரையில் ஓடி, ஒளி நிறைந்த அலைகளைக் கரை
நோக்கி எறியும் சோர்தான் என்னும் தெளிந்த நீருள்ள ஆற்றங் கரையில்,
எல்லாரும் மீட்புப் பெறுவதற்கான வழியைக் காட்ட நான் இவ்வுலகில்
வந்து பொருந்தியுள்ள நிலையை அக்கருணையன் வேத நூலைக்
கல்லாதவரும் என்னிடம் கற்று உய்வு பெறுமாறு என்னைத் தன் விரலால்
சுட்டிக்காட்டுவான்.
| 162 |
புண்டுதைந்த
தீயன்ன
சுடுஞ்சொல்
வாளாற் புரையீர்ந்து
விண்டுதைந்த விடியென்ன
முழங்கி
நீதி வெருவுய்த்துக் |
|