பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 161

கண்டுதைந்த விருடீர
     விளக்கிட் டன்ன கதிகாட்டி
மண்டுதைந்த மன்னுயிர்கள்
     பலவு முய்க்கும் வரங்கொள்வான்.
 
''புண் துதைந்த தீ அன்ன சுடுஞ் சொல் வாளால் புரை ஈர்ந்து,
விண் துதைந்த இடி என்ன முழங்கி நீதி வெரு உய்த்து,
கண் துதைந்த இருள் தீர விளக்கு இட்டு அன்ன கதி காட்டி,
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான்.

     ''அக்கருணையன் புண்ணில் தோய்ந்த நெருப்புப் போன்ற கடுஞ்
சொல்லாகிய வாளால் பாவங்களை அரிந்தும், வானத்தில் தோய்ந்த இடி
போல முழங்கி நீதியின்பால் அச்சம் பிறப்பித்தும், கண்ணில் தோய்ந்த
இருள் நீங்க விளக்கிட்டது போன்று மோட்ச கதியை விளக்கிக் காட்டியும்,
மண்ணுலகில் பொருந்தியுள்ள மனித உயிர்கள் பலவற்றையும் மோட்ச
கதிக்குச் செலுத்தத் கூடிய வரம் பெறுவான்.

 
               163
பாடலோ டியைந்தாடல்
     குணுக்கு மின்பம் பயந்தெனக்கோற்
கோடலோ டியைந்தபுகர்
     கொண்டன் றாண்ட கோமானு
மாடலோ டியைத்தொழுகி
     யரிய வெல்லா வறத்தொகையோன்
வீடலோ டியைந்தெதிர்க்கும்
     வினைசால் போதங் கனிகேட்பான்.
 

''பாடலோடு இயைந்த ஆடல் குணுக்கும் இன்பம் பயந்தென, கோல்
கோடலோடு இயைந்த புகர் கொண்டு அன்று ஆண்ட கோமானும்,
ஆடலோடு இயைந்து ஒழுகி அரிய எல்லா அறத் தொகையோன்
வீடலோடு இயைந்து எதிர்க்கும் வினை சால் போதக் கனி கேட்பான்.