|
''பாடலோடு
பொருந்திய நடனம் முடவனுக்கும் இன்பம் பயப்பது
போல், செங்கோல் கோணியதோடு பொருந்திய பாவங்களைப் பூண்டு
அந்நாளில் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் அரசனும், தன்
உரையாடலோடு தானும் பொருந்த நடந்து எல்லா அரிய அறங்களையும்
தொகையாகக் கொண்டுள்ள கருணையன், இறத்தலோடு பொருந்தி
எதிர்வந்து நிற்கும் நல்வினை தீவினை பற்றிக் கூறும் மாண்பான
போதகத்தைக் கனிந்து கேட்பான்.
கோமான்
செய்தி எதிர்காலத்தது ஆதலின், 'ஆண்ட' என்பதனை
எதிர்காலப் பொருளிற் கொள்க. ஆடல் கண்டு இன்புற்ற முடவன்
ஆடாத தன்மைபோல், அரசனும் போதகம் கேட்பதேயன்றித் திருந்தான்
என்பது கருத்து. கோமான் செய்தி பு. ஏ., 6 : 17 - 29 காண்க.
| 164 |
எரிகாய்ந்த
விரும்பின்மேற்
றுளிவீழ்ந்
தன்ன வெரிகாமம்
புரிகாய்ந்த மனத்துணர்வுற்
றொழுகல்
செய்யா புகைந்தழிய
வரிகாய்ந்த வுணர்வோன்றன்
றம்பி
யில்லாள் வைத்துமனஞ்
சொரிகாய்ந்த கரியன்ன காமப்
பவ்வந்
தோய்ந்தாழ்வான். |
| |
''எரி காய்ந்த
இரும்பின்மேல் துளி வீழ்ந்து அன்ன, எரிகாமம்
புரிகாய்ந்த மனத்து உணர்வு உற்று ஒழுகல் செய்யா புகைந்து
அழிய,
வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மனம்
சொரி காய்ந்த கரி அன்ன, காமப் பவ்வம் தோய்ந்து ஆழ்வான். |
''நெருப்பிற்
காய்ந்த இரும்பின் மேல் நீர்த்துளி விழுந்து புகைந்து
அழிவதுபோல், எரியும் தன்மையுள்ள காமத்தை நாடுவதனால் வெப்பமேறிய
அம்மன்னன் மனத்தில் அப்போதகம் உணர்வடைந்து திருந்தி நடப்பதற்கு
இடமில்லாது புகைந்து மறையும். புலிபோல் சினந்த உணர்வு கொண்ட
அம்மன்னன் தன் தம்பியின் மனைவியைத் தன் மனைவியாகக் கொண்டு்,
நெய் சொரிந்து சூடேறிய கரி போன்ற காமக் கடலில் தோய்ந்து மூழ்கிக்
கிடப்பான்.
|