பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 163

         165
நஞ்சினி தாய் நெடுநாளு
     நக்கி றக்கி நாமரத்து
விஞ்சினிதா யமுதூட்டின்
     சுவைகொள் வானோ வினைவென்ற
நெஞசினிதா யழுதுமிழ்ந்தே
     யன்னா னோது நீதிமுறைக்
கஞ்சிலனா யன்றவனைச்
     சிறையுட் பெய்வா னறப்பகையான்.
 
''நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து
விஞ்சு இனிதாய் அமுது ஊட்டின் சுவை கொள்வானோ? வினை வென்ற
நெஞ்சு இனிதாய் அமுது உமிழ்ந்தே அன்னன் ஓதும் நீதி முறைக்கு
அஞ்சிலனாய் அன்று அவனைச் சிறையுள் பெய்வான் அறப் பகையான்.

     ''நஞ்சை இனிதென்று நெடுங்காலம் நக்கி நக்கி அதனால் நாவு
மரத்துப் போன ஒருவன் மிஞ்சிய இனிமையுள்ள அமுதத்தை ஊட்டினால்
அதன் சுவையை அறிவானோ? அறியான். அவ்வாறே அறத்திற்குப்
பகைவனான அம்மன்னன், தீவினையை வென்ற இனிய நெஞ்சத்தோடு
அமுதத்தை உமிழ்ந்தாற் போன்று கருணையன் ஓதும் நீதி முறைக்கு அஞ்சி
நடவாதனாய், அந்நாளில் அவனைச் சிறையில் தள்ளுவான்.


                166
கலைசெய்தூ யுணர்வுரைத்தோன்
     பிரிதல் சொன்ன காரணமான
யுலைசெய்தீ விளைகாமத்
     துணைவி தேறா துணர்பகையாற்
கொலைசெய்வா னமைதியைக்காத்
     திருந்த காலை கோன்பிறந்த
நிலைசெய்நாள் விருந்தோம்பி
     நிருப ரெல்லா நின்றுவப்பார்.