|
''கலை செய்
தூய் உணர்வு உரைத்தோன் பிரிதல் சொன்ன காரணமாய்,
உலை செய் தீ விளை காமத் துணைவி தேறாது, உணர் பகையால்
கொலை செய்வான் அமைதியைக் காத்து இருந்த காலை, கோன்
பிறந்த நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று
உவப்பார்.
|
''நீதிக்
கலை தந்த தூய உணர்வுகளை யாவர்க்கும் உரைத்து
வருபவனாகிய கருணையன் அந்த வைப்பாட்டியைப் பிரித்துவிடச் சொன்ன
காரணத்தால், உலையிலுள்ள நெருப்புப் போல் முதிரும் அக்காமத் துணைவி
தேற இயலாமல், தன் உள்ளத்து உணர்ந்த பகையால் அவனைக் கொலை
செய்ய வாய்ப்பான நேரத்திற்காகக் காத்திருந்தாள். அப்போது அரசன்
பிறந்த சிறப்புடைய நாள் வந்தது. அதற்கான விருந்து அளிக்கப் பெற்றது.
அதில் கலந்து கொண்ட அரசரெல்லாம் மகிழ்ச்சியோடிருந்தனர்.
| 167 |
குழலெடுத்தின்
னிசைகுயில
வரசன்
காணக் குழுச்சூழ
நிழலெடுத்தொண் மணிமின்ன
நிருபன்
பாவ நிலைமகளே
யழலெடுத்தின் பெனச்சுடும்வேற்
கண்ணா
னோக்கி யறமழியக்
கழ லெடுத்தொண் சிலம்பார்ப்பக்
கனத்து மின்போ லாடுகிற்பாள். |
| |
''குழல் எடுத்து
இன்னிசை குயில, அரசன் காண, குழு சூழ,
நிழல் எடுத்த ஒன் மணி மின்ன அரசன் பாவ நிலை மகளே
அழல் எடுத்து இன்பு எனச் சுடும் வேற் கண்ணால் நோக்கி, அறம்
அழியக்
கழல் எடுத்து ஒண் சிலம்பு ஆர்ப்ப, கனத்து மின்போல் ஆடுகிற்பாள். |
''அரசன்
பாவ நிலையிற் கொண்ட மகள், அரசன் காணவும், பிற
அரசர் கூட்டமாகச் சூழ்ந்திருக்கவும், புல்லாங்குழல் கொண்டு இன்னிசை
எழுப்பவும், தான் அணிந்திருந்த ஒளி பொருந்திய மணிகள் நிழல் தந்து
|