|
மின்னவும், நெருப்பை
எடுத்து இன்பமென்று காட்டிச் சுடும் வேல் போன்ற
கண்ணால் நோக்கி, அறம் அழியுமாறு கால் தூக்கி காலில் அணிந்த சிலம்பு
ஒலிக்க, மேகத்திற் காணும் மின்னல் போல ஆடத் தொடங்குவாள்.
கழல்
- கழல் அணிந்த காலுக்கு ஆகுபெயர்: அது மரபு ஆக்கப்
பெயராகக் கழல் அணியாப் பெண்ணின் காலைக் குறித்தது. நிலை மாறும்
விரைவு பற்றி ஆட்டத்திற்கு மின்னல் உவமையாயிற்று. தம்பியின்
மனைவியைத் தன் மனைவியாகக் கொண்ட பாவத்தால் அவன் மகள் தன்
மகளாயின்மையின், 'பாவ நிலை மகள்' எனப்பட்டாள்.
| 168 |
தேன்குழைய
மலர்குழைய
விடைகண்
கைகாற் றிறங்குழைய
மான்குழையக் குழைந்திழைந்தின்
னமிர்த
மூற மகிழ்வுறிஇயுட்
கோன்குழையக் குழுப்புகழ
வுணரா
தானை கூறினன்வான்
மீன்குழையக் கவின்மகளே
கேட்ட
தீவேன் விழைந்தென்பான். |
| |
''தேன் குழைய,
மலர் குழைய, இடைகண் கை கால் திறம் குழைய,
மான் குழைய, குழைந்து இழைந்து இன் அமிர்தம் ஊற, மகிழ்வு
உறீஇ
உள்
கோன் குழைய, குழு புகழ, உணராது ஆணை கூறினன் :
'வான் மீன் குழையக் கவின் மகளே, கேட்டது ஈவேன் விழைந்து'
என்பான்.
|
''மலரிலுள்ள
தேன் கசியவும், அணிந்திருந்த மாலையிலுள்ள மலர்
குழையவும், இடையும் கண்ணும் கையும் காலும் ஆடல் திறத்திற்கு ஏற்ப
நெளியவும், மான் தன் அழகிற்கு ஈடாகாமல் குழையவும், காண்போர் மனம்
நெகிழ்ந்து ஆடலில் ஈடுபட்டுத் தன் வாயில் இனிய அமிர்தம் ஊறும்
தன்மையாகவும் அம்மகள் ஆடினாள். அரசன் அதனைக் கண்டு மகிழ்வுற்று
மனம் குழைந்தான். சூழ்ந்திருந்த அரசர் கூட்டம் புகழ்ந்தது. பின் வருவதை
உணராது, ஆணையிட்டுக் கூறியவனாய் அரசன், விண்மீன்கள் அழகற்றுக்
குழையுமாறு அழகுடன் விளங்கும் மகளே, நீ கேட்டதை விரும்பித்
தருவேன்' என்பான்.
உறீஇ
- சொல்லிசை அளபெடை
|