170 |
பகைதீர்ந்த
தெனத்தாயுள்
ளுவப்ப
நீதி பகர்ந்ததுபோற்
றொகைதீர்ந்த வரத்தோன்வாய்
தோன்ற
யாரும் துதைந்தஞ்சத்
தகைதீர்ந்த தீயரசன்
குழையக்
குன்றாத் தவத்துயர்ந்தோன்
மிகைதீர்ந்த செல்கதிசேர்ந்
துவப்பா
னென்றான் வினைதீர்ப்பான். |
|
''பகை தீர்ந்தது
எனத் தாய் உள் உவப்ப, நீதி பகர்ந்தது போல்
தொகை தீர்ந்த வரத்தோன் வாய் தோன்ற, யாரும் துதைந்து அஞ்ச,
தகை தீர்ந்த தீ அரசன் குழைய, குன்றாத் தவத்து உயர்ந்தோன்
மிகை தீர்ந்த செல் கதி சேர்ந்து உவப்பான்'' என்றான் வினை
தீர்ப்பான்.
|
''தன்
பகை தீர்ந்ததென்று அக்கொடிய தாய் தன்னுள் மகிழ்வாள்.
எண்ணில் அடங்காத வரம் பெற்ற கருணையன் வாய் அப்பொழுதும்
நீதியை எடுத்துக் கூறும் தன்மையாய்த் தோன்றும். அது கண்டு யாவரும்
துக்கம் தோய அஞ்சுவர். தன் தகுதியெல்லாம் இழந்த தீய அரசன்
குழைவான். குறையாத தவத்தில் உயர்ந்தவனாகிய கருணையனோ
துன்பமெல்லாம் நீங்கி, தான் செல்ல வேண்டிய மோட்ச கதியை அடைந்து
மகிழ்வான்'' என்று பாவ வினையைத் தீர்ப்பவனாகிய குழந்தைநாதன்
சூசைக்கு முடித்துக் கூறினான்.
காமத்தின்
தீங்கு பற்றிச் சூசை:
-
மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
171 |
முருகு வாய்மொழி
முற்றவுங் கேட்டுளத்
துருகு மாதவ னோங்கிய வோதியாற்
பருகு வாய்மையின் பானலம் கண்பொடாங்
கருகு கான்றென வாய்ந்தறைந் தானரோ. |
|
|