பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 168

 
முருகு வாய் மொழி முற்றவும் கேட்டு, உளத்து
உருகும் மாதவன் ஓங்கிய ஓதியால்
பருகு வாய்மையின் பால் நலம் பண்பொடு ஆங்கு
அருகு கான்றென ஆய்ந்து அறைந்தான் அரோ:

     திரு மகனின் தேன் போன்ற வாய்ச் சொல்லை முழுவதும் கேட்டுக்
கருணையன் பொருட்டு உருகும் பெருந் தவத்தோனாகிய சூசை, தான்
பருகிய உண்மை என்னும் பாலின் நலத்தைப் பண்போடு சேர்த்து அருகே
வெளியிட்டாற் போல், தன் சிறந்த அறிவினால் ஆய்ந்து பின்வருமாறு
சொல்லத் தொடங்கினான் :

 
                   172
கொல்லும் வேலினுங் கொன்றுயிர் மெய்யுணப்
புல்லும் வீயினும் புன்கண் புகுத்திமேற்
செல்லுங் கூற்றினு நஞ்சினுந் தீயதா
மொல்லு மாதரு ணர்ந்துடை யாசையே.
 
''கொல்லும் வேலினும், கொன்று உயிர் மெய் உணப்
புல்லும் வீயினும், புன்கண் புகுத்தி மேல்
செல்லும் கூற்றினும், நஞ்சினும் தீயது ஆம்
ஒல்லும் மாதர் உணர்ந்து உடை ஆசையே.

     ''மனத்திற்குப் பொருந்திய பெண்களை இன்பமென்று கருதி அவர்
மீது கொள்ளும் காம இச்சை, கொல்லும் வேலைக் காட்டிலும் உயிரைக்
கொன்று உடலை உண்ண நெருங்கும் புலியைக் காட்டிலும், சாவாகிய
துன்பத்தைப் புகுத்தி யாரும் அறியாது மேலே சென்று விடும் கூற்றுவனைக்
காட்டிலும், நஞ்சைக் காட்டிலும் தீயது ஆகும்.

 
                   173
கனிநு ழைந்தமு தோடுணுங் காளமே
துனிநு ழைந்தது கைத்துயிர் துய்த்தென
நனிநு ழைந்தந சையினி துண்டபின்
னினிநு ழைந்தவி டுக்கண்வ ருத்துமே.
 
''கனி நுழைந்த அமுதோடு உணும் காளமே
துனி நுழைந்து துகைத்து உயிர்துய்த்தென,
நனி நுழைந்த நசை இனிது உண்டபின்
இனி நுழைந்த இடுக்கண் வருத்துமே.