பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 169

     ''இனிமை பொருந்திய பாலோடு உண்ணும் நஞ்சு துன்பத்தோடு
நுழைந்து தாக்கி உயிரைக் குடிப்பதுபோல, மிகுதியாக மனத்துள் நுழைந்த
ஆசையால் இனிதென்று காமத்தை அனுபவித்த பின் இனி அதனோடு
நுழைந்த துன்பங்கள் உள்ளத்தையும் உடலையும் தொடர்ந்து வருத்திக்
கொண்டிருக்கும்.

     நுழைந்த + அமுது - 'நுழைந்தவமுது' என வரவேண்டியது
'நுழைந்தமுது' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.

 
                174
சிலையின் மேன்மையுஞ் சீர்த்தியுஞ் சீலநன்
னிலையின் மேன்மையும் வாழ்க்கையு நீதமுங்
கலையின் மேன்மையுங் காமநி னைத்தகா
லுலையின் மேல்வழு தொத்தெரிந் திற்றவே.
 
''சிலையின் மேன்மையும், சீர்த்தியும், சீல நல்
நிலையின் மேன்மையும், வாழ்க்கையும், நீதமும்.
கலையின் மேன்மையும் காமம் நினைத்த கால்
உலையின் மேல் வழுது ஒத்து எரிந்து இற்றவே.

     ''வில்லினால் மேன்மை பெறும் வீரமும், புகழும் நல்ல நிலையில்
அமைந்த பிற ஒழுக்கங்களின் மேன்மையும், செல்வ வாழ்க்கையும், நீதி
முறையும், கற்ற கலைகளின் மேன்மையும், ஒருவன் காமத்தைப் பற்றி
நினைந்து இடங்கொடுத்த போதே உலையிலிட்ட வைக்கோல் போல
எரிந்து அழிவது உறுதி.

     இற்ற - அழிந்தன; அழிதல் உறுதியாதலின், இறந்த காலத்தாற்
சொல்லப்பட்டது.

 
                    175
கண்ண வாவுக திர்கடன் மூழ்குமுன்
பெண்ண வாவுகொ ணர்பிணி தன்மையிற்
புண்ண வாவுபு லாலுணுங் குந்தமும்
விண்ண வாவுவிண் ணேறுமோர் தீமையோ.
 
''கண் அவாவு கதிர் கடல் மூழ்கும் முன்
பெண் அவாவு கொணர் பிணி தன்மையின்,
புண் அவாவு புலால் உணும் குந்தமும்,
விண் அவாவு விண் ஏறும் ஓர் தீமையோ?