''கண்
விரும்பும் கதிர்களையுடைய பகலவன் கடலில் மூழ்கும்
முன்னே பெண்ணை விரும்புதலாகிய காமம் கொணரும் துன்பத்தின்
தன்மையை ஒப்பிட்டு நோக்கினால், புண்ணோடு பொருந்திய ஊனை உண்ட
தன்மையாய் அதன்மீது மேலும் குத்தும் வேலும், மேகத்திற் பொருந்தியுள்ள
இடியும் ஒரு தீமை யென்று கருதக் கூடுமோ?
வேலும்
இடியும் உடலை அழித்து உயிரைப் பிரிப்பதனாற் கொடிய
வாயினும், காமம் உடலைக் கெடுத்து ஆன்மாவையும் நரகத்தில் தள்ளும்
தன்மை நோக்கி அவற்றினும் கொடியதாயிற்று 'பெண் அவாவு' என்ற
விடத்து 'அவா' சாரியை பெற்று நின்றது. 'கதிர்' கதிரை உடைய
பகலவனுக்கு ஆகு பெயர்.
176 |
அரிந்த போதுகு
ழைந்தென வாகுலம்
பிரிந்த போதுந சைபெறு மாமென்பார்
விரிந்த போதுகு டைவினை வண்டெனப்
புரிந்த போதுந சையுயிர் போழுமே. |
|
''அரிந்த போது
குழைந்தென, ஆகுலம்
பிரிந்த போது நசை பெறுமாம் என்பார்.
விரிந்த போது குடை வினை வண்டு எனப்
புரிந்த போது நசை உயிர் போழுமே. |
''கொம்பிலிருந்து
அரிந்த மலர் வாடுவது போல், ஆசையும் பிரிந்த
போது வருத்தம் அடையுமென்று அறிந்தோர் கூறுவர். ஆனால், காம
ஆசையோ, மலர் விரிந்த சமயம் வண்டு குடையும் செயல் போல, விரும்பிய
உடனேயே உயிரைப் பிளக்கும்.
பிரிந்த
போது வாடுதல் ஆசைக்கு அளவென்றும், விரும்பிய போதே
உயிரை மாய்ப்பது காமத்திற்கு அளவென்றும் வேறுபாடு காண்க.
177 |
தசைசெய்
மெய்ப்பகை தாங்கிய மாக்கடந்
நசைசெய் யப்பகை நாடினர் தாமென
விசைசெய் விற்பகை விற்றொழி்ல் காக்கினும்
வசைசெய் யப்பகை மாற்றரி தாமரோ. |
|