பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 171

''தசை செய் மெய்ப் பகை தாங்கிய மாக்கள் தம்
நசை செய் அப் பகை நாடினர் தாம் என,
விசை செய் வில் பகை வில் தொழில் காக்கினும்,
வசை செய் அப் பகை மாற்ற அரிது ஆம் அரோ.


     ''இயல்பாகவே தம் ஊன் தூண்டுகின்ற உண்மையான பகையாகிய
காமத்தைத் தம் உடலில் தாங்கிக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் தம் ஆசை
தூண்டுகின்ற அப்பகையைத் தாமாகவும் நாடுகின்ற காரணத்தால், விசையை
உடைய வில்லினால் ஏற்படும் பகையை ஒருவன் தன் வில் தொழில்
திறமையால் தடுத்து தன்னைக் காத்துக் கொள்ளவும் கூடு மாயினும், தனக்கு
இகழ்ச்சியையும் சேர்த்துத் தருகின்ற காமமாகிய அப்பகையைத் தடுத்து
மாற்றுவதென்பது அரிய செயல் ஆகும்.

     மாற்ற + அரிது - 'மாற்ற வரிது' என்பது தொகுத்தல் விகாரமாக
'மாற்றரிது' என வந்தது.

 
                       178
ஒல்லுந் தன்மையை யோர்ந்தில மானிடர்
கொல்லுந் தம்பகை யேகுண மென்பது
சொல்லுந் தன்மையன் றேலருள் சூழ்ந்துநீ
வெல்லுந் தன்மையை யாரைவி ளம்புவார்.
 
''ஒல்லும் தன்மையை ஓர்ந்து இல மானிடர்,
கொல்லும் தம் பகையே குணம் என்பது
சொல்லும் தன்மை அன்றேல், அருள் சூழ்ந்து நீ
வெல்லும் தன்மையை யார் ஐ விளம்புவார்?

     ''காமப் பகையை வெல்ல இயலும் தன்மையை உணர்ந்து
கடைப்பிடித்தல் இல்லாத மனிதர், கொல்லும் தன்மை வாய்ந்த தம் காமப்
பகையையே குணமென்று போற்றுவது சொல்லும் தரத்தது அன்றெனினும்,
அருள் கருதி நீ அதனை வெல்ல உதவும் தன்மையை நுண்மையாக யார்
சொல்ல வல்லவர்? யார் ஐ என்பதில் ஐ சாரியை.

 
                  179
மின்ன னேரொழி யின்பம்வி ரும்பிய
வன்ன நேரலன் கோடணை யாற்றலோ
டின்ன தாலரு ளோனிரும் வீட்டிடை
மன்ன நீ செயும் வல்லரு ளாண்மையே.