''மின்னல் நேர்
ஒழி இன்பம் விரும்பிய
அன்ன நேரலன் கோடணை ஆற்றலோடு,
இன்னதுஆல் அருளோன் இரும் வீட்டிடை
மன்ன நீ செயும் வல் அருள் ஆண்மையே. |
''மின்னல்
போல் நொடியில் மறையும் சிற்றின்பத்தை விரும்பிய
நன்னெறிக்குப் பகைவனான அம் மன்னன், அத்தகைய கொடுமையைக்
கருணையனுக்குச் செய்தான். ஆனால் அருளோனாகிய கருணையன்
பேரின்ப வீட்டில் நிலைபெறுமாறு நீ செய்யும் வல்லமை நிறைந்த அருளால்
ஆளும் தன்மையோ இத்தகையது.
அருளோன்
என்பது கருணையனுக்கு அப்பொருளோடு பொருந்திய
மறு பெயர்.
180 |
கடுவு
யிர்த்தடுங் கட்செவி நாகமே
கொடும ருத்துவர் கொல்விடங் கொல்லுவார்
வடும ருட்டிய வஞ்சினர் செய்ததீ
யடுவி னைக்கொடு நீயரு ளாற்றுவாய். |
|
''கடு உயிர்த்து
அடும் கண் செவி நாகமே
கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார்.
வடு மருட்டிய வஞ்சினர் செய்த தீ
அடு வினை கொடு நீ அருள் ஆற்றுவாய். |
''நஞ்சை
உமிழ்ந்து கொல்லும் கண்ணைச் செவியாகக் கொண்டுள்ள
நாகப் பாம்பைக் கொண்டே மருத்துவர் கொல்லும் தன்மையுள்ள நஞ்சைக்
கொன்று மாற்றுவர். அதுபோல, குற்றத்தினால் மனம் மருண்ட வஞ்சகர்
செய்த தீப்போன்ற கொல்லும் செயலைக் கொண்டே நீ அருட் செயல்
புரிவாய்.
181 |
தீய தம்வினை
தீயர்மு டித்தலாற்
றூய நல்வினை சூழ்ந்து முடித்தரு
ளாய நின்வினை யாதர வாயினிக்
காய வெவ்வினைக் கையருக் கஞ்சவோ. |
|