பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 173

''தீய தம் வினை தீயர் முடித்தலால்
தூய நல்வினை சூழ்ந்து முடித்து அருள்
ஆய நின் வினை ஆதரவாய், இனிக்
காய வெவ் வினைக் கையருக்கு அஞ்சவோ?


     ''தீயவர் தம் தீய செயலை முடித்தலின் மூலமாகவே நீ தூய
நல்வினையைக் கருதி முடித்தருளுவாய். அத்தகைய உன் செயலின் ஆதரவு
கொண்டு, இனி மேலும் கொடுவினை செய்யும் கீழ் மக்கள் சினங் கொள்ளக்
கண்டு அவருக்கு அஞ்சவும் வேண்டுமோ?

     தீமையினின்றும் நன்மை பிறப்பிக்க இறைவன் வல்லவனாதலின்,
எத்தீமைக்கும் அஞ்ச வேண்டுவதில்லை யென்பது கருத்து.

 
              182
உலகி யாவுமு டற்றினு மஞ்சவோ
வலகி யாவும கன்றரு ளாற்றநீ
விலகி யாவும்வி ளங்கிய வெஞ்சுட
ரிலகி யாரிரு ளிற்றது போலென்றான்.
 
''உலகு யாவும் உடற்றினும் அஞ்சவோ,
அலகு யாவும் அகன்று அருள் ஆற்ற நீ,
விலகி யாவும், விளங்கிய வெஞ்சுடர்
இலகி ஆர் இருள் இற்றது போல்?'' என்றான்.

     ''நீ அளவு யாவற்றையும் கடந்த அருளைச் செய்யவே, விளங்கிய
வெஞ்சுடரோனாகிய கதிரவன் இலங்கவும் நிறைந்த இருளெல்லாம் அழிவது
போல் தீமை யாவும் விலகுவதனால், உலகம் யாவும் ஒன்று கூடி
எதிர்த்தாலும் அஞ்ச வேண்டுமோ?'' என்று சூசைமுடித்து கூறினான்.

 
                  183
என்ன மாதவ னெண்ணகன் றின்புறீஇ
யன்ன நாகில ருந்தவன் மாட்சியை
யுன்ன நாவமு தூற்றென நாடொறு
மன்ன நாதனை மாறில வாழ்த்தினான்.
 

என்ன மாதவன் எண் அகன்று இன்பு உறீஇ,
அன்ன நாகில் அருந் தவன் மாட்சியை
உன்ன நாவு அமுது ஊற்று என, நாள்தொறும்
மன்ன நாதனை மாறு இல வாழ்த்தினான்.