பெரிய
தவத்தோனாகிய சூசை மேலே காட்டியவாறு சொல்லி
எண்ணில் அடங்காத இன்பம் உற்று, அத்தகைய இளமையில் அரிய
தவத்தேனாய் விளங்கிய கருணையனது மாட்சியை நினைக்கும் போதெல்லாம்
நாவில் அமுதம் ஊறிய தன்மையாக, நாள்தோறும் அத்தகைய அருள் செய்த
மன்னனாகிய ஆண்டவனை மாறாமல் வாழ்த்தினான்.
கருணையன்
மாட்சிப் படலம் முற்றும்
ஆகப்
படலம் 26 க்கு விருத்தம் 2477
|