ஞாபகம்
என்பது அரும் பொருள். அறிவு ஆகிய பொருட்களைக்
குறிக்கும். அது இங்கு நல்லொழுக்கமாகிய அறிவுரைப் பொருளைக்
குறித்தது. இது சூசை எசித்தியருக்கு நல்லொழுக்க நெறிகளை போதித்ததைக்
கூறும் பகுதி.
அடியிட்டு
நடந்த அன்பு நாதன்
-
விளம் - விளம், - மா, கூவிளம்
1 |
மனையிடை
யிவையெலாம் வழங்குங் காலையிற்
கனையிடை முரசதிர் கனலி மாபுரம்
வினையிடை விளைசெயிர் விலகி ஞாபகச்
சினையிடை மலர்ந்தநற் சீலஞ் செப்புவாம். |
|
மனையிடை இவை
எலாம் வழங்கும் காலையில்
கனை இடை முரசு அதிர் கனலி மா புரம்
வினையிடை விளை செயிர் விலகி, ஞாபகச்
சினையிடை மலர்ந்த நற் சீலம் செப்புவாம். |
திருக்குடும்பம்
தங்கியிருந்த சிறு மனையில் இவையெல்லாம் நிகழ்ந்து
கொண்டிருந்த வேளையில், ஒலிக்கும் முரசு இடையிடையே முழங்கும்
இரவிமாபுரம் என்னும் அப்பெரு நகரம் தீய செயலால் விளையும் பாவத்தை
விட்டு விலகி, அறவுரை என்னும் கிளையில் அங்கு மலர்ந்த நல்லொழுக்கம்
என்னும் மலரைப் பற்றிச் சொல்லுவோம்:
கனலி,
இரவி என்பன கதிரவனுக்கு மறு பெயர்கள். எனவே
இரவிமாபுரம் கனலிமாபுரம் எனப்பட்டது.
2 |
போர்முகத்
துற்றபேய்ப் புதையப் பூதியுட்
கார்முகத் திடியெனக் கறங்கி வீழ்ந்துறத்
தார்முகத் திக்கென முதற்சொற் சாற்றிய
வேர்முகத் திளவலன் றடிவைத் தேகினான். |
|