பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 176

போர் முகத்து உற்ற பேய் புதையப் பூதியுள்
கார் முகத்து இடி எனக் கறங்கி வீழ்ந்து உற,
தார் முகத்து இக்கு என முதல் சொல் சாற்றிய
ஏர் முகத்து இளவல் அன்று அடி வைத்து ஏகினான்.


     போர் செய்ய வந்த பேய்கள் கருமேகத்தினின்று விழுந்த இடி போல
நரகப் புழுதியினுள் புதைய விழுந்து அங்கே கிடக்குமாறு பூமாலையிற்
பொருந்தியுள்ள தேன் போல் முதல் வார்த்தை பேசிய அழகிய முகமுள்ள
இயேசு பாலகன், அன்று முதல் அடி எடுத்து வைத்து நடந்தான்.

     முதற் சொல் சாற்றியது : முன் 24 : 60 - 65 காண்க.

 
                       3
பூவிடைப் புதிமதுப் பூத்த பூவென
நாவிடைத் தேனுக நவின்று லாவலிற்
பாவிடைப் புகழெழ வும்பர் பாடிமேற்
கோவிடைத் திருவிழாக் கொள்கைத் தாயதே.
 
பூ இடைப் புதி மதுப் பூத்த பூ என,
நா இடைத் தேன் உக நவின்று உலாவலின்,
பா இடைப் புகழ் எழ உம்பர் பாடி, மேல்
கோ இடைத் திருவிழாக் கொள்கைத்து ஆயதே.


     இம் மண்ணுலகில் புதுவகைத் தேனோடு பூத்த பூவைப்போல்,
திருமகன் தன் நாவினின்று தேன் சிந்துவதுபோல் வார்த்தை பேசி
நடந்தான். அப்போது பாடலினிடையே புகழ் புலப்படுமாறு வானவர் பாடி
வானத்தில் நின்றனர். அது மேல் வானத்தில் திருவிழாக்
கொண்டாடியதுபோல் இருந்தது.

                   4
துன்னமும் மிசைப்புமொன் றின்றித் தூய்நிறத்
தன்னமும் மறுவென மெய்ப்பை யன்னைதான்
பின்னமும் முறைதொழு திட்டுப் பேரருண்
மின்னமும் முடியினோன் வேய்ந்து தோன்றினான்
 
துன்னமும் இசைப்பும் ஒன்று இன்றி, தூய் நிறத்து
அன்னமும் மறு என மெய்ப் பை அன்னை தான்
பின்ன மும்முறை தொழுது இட்டு, பேர் அருள்
மின்ன மும் முடியினோன் வேய்ந்து தோன்றினான்.