பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 181

மைம்மழை யாகப் பேய்கள்
     வளர்த்ததீ மருளு நீக்க
வம்மழை குளிர்ப்ப தன்றி
     யகத்தொளி விளக்க தாமே.
 
''மும் மழை மதியில் பொய்யா முகில் என, அருளின் வாய்ந்த
கம் மழை பொழிய நானே, களிப்பு உற விளைவு காண்பாய்
மை மழையாகக் பேய்கள் வளர்த்த தீ மருளும் நீக்க
அம் மழை குளிர்ப்பது அன்றி, அகத்து ஒளி விளக்கு அது ஆமே.

     ''மாதந் தோறும் மூன்று மழை பொழியத் தவறாத மேகம் போல,
நானே அருள் என்னும் பயன் வாய்ந்த நீரை மழையாகப் பொழிய,
களிப்போடு நீ விளைச்சல் காண்பாய். இருள் மழையாகப் பேய்கள்
வளர்த்து விட்ட தீமையும் மயக்கமும் நீங்குமாறு அந்த அருள் மழை
குளிரச் செய்வதுமன்றி, அதுவே மக்கள் உள்ளத்தில் ஒளி விளக்காகவும்
அமையும்.

     'விளைவு' என்பது முன் பாடலிற் குறித்த பேரின்ப வீடாகிய
செல்வத்தின் விளைச்சல் என்று கொள்க.

 
               12
ஆசையே ராகப் பூட்டி
     யறிவழித் துளஞ்சே றாக்கி
யோசையே கலங்க வீக்கி
     யுழுதுபற் புரையே வித்தி
மாசையே முதற்பல் வாழ்வின்
     வளர்பயிர் முகத்தைக் காட்டிக்
காசையே யுதவாப் பூதிக்
     கனல்விளை வியற்றும் பேயே.
 
''ஆசை ஏர் ஆகப் பூட்டி, அறிவு அழித்து உளம் சேறு ஆக்கி,
ஓசையே கலங்க வீக்கி உழுது, பல் புரையே வித்தி,
மாசையே முதல் பல் வாழ்வின் வளர் பயிர் முகத்தைக் காட்டி,
காசையே உதவாப் பூதிக் கனல் விளைவு இயற்றும் பேயே.