பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 182

     ''அதே நேரத்தில் எதிரியாகிய பேய், அறிவை அழித்து மக்கள்
உள்ளத்தைச் சேறாக்கி, ஆசையை ஏராகப் பூட்டி, மக்கள் கலங்கக்
காரணமான ஆரவாரத்தையே எருதுகளாகக் கட்டி உழுது, பலவகைக்
குற்றங்களையும் விதையாக விதைத்து, தன்னை வழிபடுவோர்க்குப் பொன்
முதலாகப் பலவகை நல்வாழ்வு போல் வளர்கின்ற பயிரின் முகத்தைப்
பிறர்க்குக் காட்டி, இறந்த பின் காசுக்கும் உதவாத புழுதி நிறைந்த நரக
நெருப்பாகிய விளைச்சலைச் செய்து கொண்டிருக்கும்.

 
                  13
தெள்ளிய வரத்தின் மாரி
     திளைத்தவண் டவத்தின் குன்றத்
துள்ளிய வோதி நீத்த
     மொழுகிவந் தலகை வஞ்சத்
தெள்ளிய புரையின் பைங்கூ
     ழிற்றறச் சிவையிற் கொய்து
விள்ளிய கொடியோய் சீல
     விளைவுணர்ந் தொழுக வென்றான்.
 
''தெள்னிய வரத்தின் மாரி திளைத்த வண் தவத்தின் குன்றத்து
உள்ளிய ஓதி நீத்தம் ஒழுகி வந்து, அலகை வஞ்சத்து
எள்ளிய புரையின் பைங்கூழ் இற்று அறச் சிவையின் கொய்து,
விள்ளிய கொடியோய், சீல விளைவு உணர்ந்து ஒழுக'' என்றான்.

     ''மலர் விரிந்த கொடியைத் தாங்கியவனே, தெளிந்த தெய்வ வரம்
என்னும் மழையில் மூழ்கிய வளமான தவம் என்னும் மலையினின்று,
துணையாகக் கருதிய அறவுரை என்னும் வெள்ளம் பாய்ந்து வருதலால்,
பேய் தன் வஞ்சகத்தால் உன்னை இகழ்ந்த தன்மையாய்ச் செய்துவரும்
பாவப் பயிர் ஒடிந்து கெடும்படி வேரோடு கொய்து, ஒழுக்கப் பயிர்
விளைச்சலுக்கான வழி வகைகளை உணர்ந்து ஒழுகுவாயாக'' என்று
திருமகன் முடித்தான்.

 
              14
கூகையே யொளியை வெஃகக்
     கொடும்புலி யிரங்கச் செந்தீ
வாகையே குளிர்ப்ப நச்சு
     மரமுயிர் காக்க மற்றை