யோகையே
யுணர்ந்த காலை
யுனக்கரி
தென்கொல் வேத
மூகையே நானுங் கூற
முயல்வியே
யெனத்தா னேர்ந்தான். |
| |
''கூகையே ஒளியை
வெஃக, கொடும் புலி இரங்க, செந்தீ
வாகையே குளிர்ப்ப, நச்சு மரம் உயிர் காக்க, மற்றை
ஓகையே உணர்ந்த காலை உனக்கு அரிது என்கொல்? வேத
மூகையே நானும் கூற முயல்வியே'' எனத் தான் நேர்ந்தான். |
சூசை
திருமகனை நோக்கி, ''கூகை ஒளியை விரும்பவும், கொடிய புலி
உயிர்களுக்கு இரங்கவும், செந்தீயின் வெற்றியாகிய வெப்ப மிகுதி குளிரவும்,
நஞ்சு மரம் உயிரைக் காக்கவும், இவ்வாறு முரணான மற்ற எவற்றையும்
மகிழ்வோடு எண்ணியபோதே செய்து முடிக்க உனக்கு அரியது என்ன?
அவ்வாறே, வேதம் ஓதுதலில் ஊமையாகிய நானும் தக்கவாறு எடுத்துக் கூற
நீயே என்னை ஈடுபடுத்துவாயாக'' என்று கூறி, அந்த நம்பிக்கையோடு
தானும் அதற்கு இசைந்தான்.
| 15 |
அணித்தகு
வுருவி லெங்கு
மனலியே
விளக்கு மாறும்
மணித்தகு மலர்பூ வாச
மதுநலம்
பொழியு மாறும்
பணித்தகு பயிற்றல் வேண்டா
படர்ந்தவன்
புணர்வி னோற்கே
பிணித்தகு வுயிரோம் பாறும்
பேசவோ
வென்றா னாதன். |
| |
''அணித் தகு
உருவில் எங்கும் அனலியே விளக்கும் ஆறும்,
மணித் தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும்
பணித் தகு பயிற்றல் வேண்டா, படர்ந்த அன்பு உணர்வினோற்கே
பிணித் தகு உயிர் ஓம்பு ஆறும் பேசவோ?'' என்றான் நாதன். |
குழந்தை
நாதன் சூசையை நோக்கி, ''பகலவன் அழகு பொருந்திய
தன் உருவத்தால் எங்குமுள்ள பொருள்களை விளங்கச் செய்யும் விதமும்,
|