பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 184

மாணிக்கம்போல மலரும் பூ தனது மணமுள்ள தேனாகிய நலத்தைப்
பொழியும் விதமும் இயல்பாக நிகழ்வதன்றி, அத்தொழில்களுக்கு உரிய
முறையில் அவற்றிற்குப் பயிற்சியளிக்க வேண்டுவதில்லை. அது போலவே,
உயிர்கள் மீதெல்லாம் படர்ந்த அன்புணர்வு கொண்ட ஒருவனுக்கு, பாவ
நோய் வயப்பட்ட உயிர்களைப் பேணும் முறையை நான் எடுத்துப் பேசவும்
வேண்டுமோ?'' என்றான்.

 
                   16
நான்முகத் தருளி னாக்க
     நாட்டிமேற் கதியி லுய்ப்ப
வூன் முகத் துறிநா னேடு
     முயிரென வுணர்ந்த நட்பி
னூன்முகத் துணர்த்தி யென்ன
     நுவன்றிறை யாசி தந்தான்
றேன்முகத் தலர்தாட் சூசை
     சென்னிபூண் டிறைஞ்சி னானே.
 
''நால் முகத்து அருளின் ஆக்கம் நாட்டி மேல் கதியில் உய்ப்ப,
ஊன் முகத்து உறி, நான் நேடும் உயிர் என உணர்ந்த நட்பின்,
நூல் முகத்து உணர்த்தி'' என்ன நுவன்று இறை ஆசி தந்தான்.
தேன் முகத்து அலர் தாள் சூசை சென்னி பூண்டு இறைஞ்சினானே.

     இறைவனாகிய திருமகன், ''ஊனுடல் எடுத்துப் பிறந்து, நாலு
திசையிலும் அருள் என்னும் செல்வத்தை நாட்டி வான் வீட்டிற் கொண்டு
செலுத்துமாறு நானே தேடி வந்த உயிர்கள் இவை என்று உணர்ந்த
அன்பினோடு, வேத நூல் அடிப்படையில் அற நெறிகளை
உணர்த்துவாயாக'' என்று கூறி ஆசி வழங்கினான். சூசை அதற்கு இசைந்து,
தேனைக் கொண்ட தாமரை மலர் போன்ற திருமகனின் அடியைத்
தலைமேல் தாங்கி வணங்கினான்.

 
                17
நாடக வரச னொவ்வா
     நவிக்கனி முட்டி யொவ்வா
மாடக வாணி யொவ்வா
     மடக்கிளி யுணர்த்துந் தீஞ்சொற்