|
மாணிக்கம்
போல் மாண்பு பொருந்தியனவும், பூவைப் போல்
மலர்ந்தனவும், மணம் தரும் இனிய தேனில் தோய்ந்தனவும், அமுதம் போல்
யாரும் விரும்பி நுகர்வனவும், தவறாத ஒழுக்க நெறியைத் தருவனவும், இனி
வரவிருக்கும் மோட்ச இன்பத்திற்கு இட்டுச் செல்வனவும், தன் கருணை
நெஞ்சத்துள் ஆராய்ந்து தேர்ந்தனவுமான அறநெறிகளை எல்லோர்க்கும்
சொல்வஃவென்று சூசை தன் மனத்துத் துணிவு கொண்டான்.
ஈய்ந்தன
- 'ஈந்தன' என்பதன் விரித்தல் விகாரம். 'அன்றோ'
அசைநிலை.
சூசையின்
அறவுரை முறை
-
மா, கூவிளம், - விளம், - விளம், - மா
| 19 |
ஈர
மொன்றில விறைத்தன பயனில விரையாம்
வார மொன்றில மனத்தவர்க் கோதிய மறையென்
றார மொன்றிய வருளணி மார்பனே யுடற்கு
மோர மொன்றிய வுதிவியோ டன்புற லுணர்ந்தான். |
| |
ஈரம் ஒன்று இல
இறைத்தன பயன் இல விரை ஆம்
வாரம் ஒன்று இல மனத்தவர்க்கு ஓதிய மறை என்று,
ஆரம் ஒன்றிய அருள் அணி மார்பனே உடற்கும்
ஓரம் ஒன்றிய உதவியோடு அன்பு உறல் உணர்ந்தான். |
அன்பு
சிறிதும் இல்லாதவர்க்கு ஓதிய வேதம், ஈரம் சிறிதும் இல்லாத
நிலத்தில் இறைத்த விதைகள் போல் பயனற்றுப் போகும் என்று தெரிந்து,
கருணையை மாலைக்கு நிகராக அணிந்த மார்பை உடையவனாகிய சூசை,
அறவுரை கேட்போரின் உடலுக்கும் சார்பாகப் பொருந்திய உதவிகளைச்
செய்வதன் மூலம் அவர்தம் அன்பைப் பெறலாமென்று உணர்ந்தான்.
| 20 |
அன்பு வித்தின
ராங்கதன் விளைவென வன்பைப்
பின்பு கொள்பவ ரெனப்பிற ருயிரெனப் பேணி
யென்பு வேண்டினு மிடுந்தயை மலர்முகத் தெவர்க்கும்
முன்பு காண்டில முகைமது மொழிநல முறைப்பான். |
|