அன்பு வித்தினர்
ஆங்கு அதன் விளைவு என அன்பைப்
பின்பு கொள்பவர் என, பிறர் உயிர் எனப் பேணி,
என்பு வேண்டினும் இடும் தயை மலர் முகத்து, எவர்க்கும்
முன்பு காண்டு இல முகை மது மொழி நலம் உரைப்பான். |
அன்பை
முன் விதைத்தவர் அவ்வாறே அதன் விளைச்சலாகப் பின்பு
அன்பைக் கொள்ளுவர் என்று தெரிந்து, பிறரைத் தன் உயிர் போலப்
பேணி, தன் எலும்பையே கேட்டாலும் தரக் கூடிய கருணை மலர்ந்த
முகத்தோடு, எவர்க்கும் அந்நாட்டில் முன்பு கண்டறியாத அன்புச்
சொற்களைப் பூவிற் பிறந்த தேனின் இனிமை நலத்தோடு உரைப்பான்.
என்பு
- எலும்பு. அது ஆகுபெயராக உடலைக் குறிக்கும். 'காண்டு'
என்பது 'கண்டு' என்ற சொல்லின் நீட்டல் விகாரம்.
| |
கைத ளர்ந்தனர்க்
கிரந்துதா னளித்துநோய் கடுத்த
மெய்த ளர்ந்தனர் மெலிவறு மருந்தெனப் பொறிசெய்
பொய்த ளர்ந்தனர் புலனுற விளக்கென வெவர்க்கு
மைத ளர்ந்தன மனத்துரித துணையென வானான். |
| |
கை தளர்ந்தனர்க்கு
இரந்து தான் அளித்து, நோய் கடுத்த
மெய் தளர்ந்தனர் மெலிவு அறு மருந்து என, பொறி செய்
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என, எவர்க்கும்
மை தளர்ந்தன மனத்து உரித் துணை என ஆனான். |
உழைத்து
உண்ண இயலாது கை தளர்ந்தவர்க்குத் தானே இரந்து
கொடுத்தும், நோய் மிகுந்ததனால் உடல் தளர்ந்தவர்க்கு மெலிவு போக்கும்
மருந்தாய் உதவியும், ஐம்பொறிகள் தூண்டும் பொய்யாசைகளால் தளர்ந்தவர்
நல்லறிவு பெற விளக்குப் போல் நின்றும், இவ்வாறு மயக்கத்தால் தளர்ந்த
மனத்துக்கு உற்ற துணையாய் யாவர்க்கும் அமைந்தான்.
| 22 |
கொடுந்தொற்
புண்ணினைக் கொந்தழ லாற்றிய தனைய
சுடுஞ்சொற் கொண்டருந் துகள்வடு வாற்றுதல் வேண்டின்
விடுஞ்சொற் பூவென விள்ளிய நயமுகத் தருளே
படுஞ்சொற் கொண்டுளம் பனிப்படக் குளிர்த்தினி
துரைப்பான். |
|