கொடும் தொல்
புண்ணினைக் கொந்து அழல் ஆற்றியது அனைய
சுடும் சொல் கொண்டு அருந் துகள் வடு ஆற்றுதல் வேண்டின்
விடும் சொல் பூ என விள்ளிய நய முகத்து அருளே
படும் சொல் கொண்டு உளம் பனிப் படக் குளிர்த்து இனிது உரைப்பான்.
|
கொடிய
பழம்புண்ணைக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பினால்
ஆற்றிய தன்மைபோல், மாற்றுதற்கு அரிய பாவ வடுவைச் சுடு சொற்களால்
ஆற்ற வேண்டிய இடத்தும், பயன்படுத்தும் அச் சொல்லையும் மலரென
மலர்ந்த இனிய முகத்தோடும் தொடர்ந்து கருணை புலப்படும் இன்
சொல்லைக் கொண்டும், கேட்போர் உள்ளம் பனி போலக் குளிரச் செய்து
இனிதாகச் சொல்லுவான்.
'கொந்து'
என்பதனைக் 'கொத்து' என்பதன் மெலித்தல் விகாரமாகவும்
கொள்ளலாம். பழம் புண்ணை நெருப்பினால் சுடும் உவமை 28 : 54ல்
வருவதைக் காண்க.
| 23 |
தீயொக்
குந்துயர் தீய்க்குளத் திமிமழை யொக்கு
நோயொக் குங்கடை நுனித்தநன் மருந்தொக்கு மிருளைப்
பேயொக் குங்கடைப் பெயர்த்துளத் தொளிவிளக் கொக்குந்
தாயொக் கும்பயன் றருமறை யொக்குந்தன் றயவே. |
| |
தீ ஒக்கும் துயர்
தீய்க்கு உளத்து இழி மழை ஒக்கும்;
நோய் ஒக்குங் கடை நுனித்த நல் மருந்து ஒக்கும்; இருளைப்
பேய் ஒக்குங் கடைப் பெயர்த்து உளத்து ஒளிவிளக்கு ஒக்கும்;
தாய் ஒக்கும்; பயன்தரு மறை ஒக்கும் தன் தயவே. |
சூசை
காட்டும் தயவு தீயைப் போன்ற துயரம் எரிக்கும் உள்ளத்துக்கு,
மேல் நின்று பொழிந்த மழை போன்று குளிர்ச்சி தரும்; நோய் அணுகிய
இடத்துத் தகுந்த நல்ல மருந்து போன்று உதவும்; பேய் அணுகிய இடத்து
மன இருளை நீக்கி ஒளி விளக்கை ஒத்திருக்கும்; யாவர்க்கும் தாய் போன்று
விளங்கும். மறுமைப் பயன் தரும் வேதம் போன்று உதவும்.
|