| 28 |
சாற்றிக்
காட்டிய தகைநெறி விரும்பிவந் தொருநா
ளேற்றிக் காதலோ டிருந்திருச் செல்வரே வினாவப்
போற்றிக் கேண்மினீர் புகையென வொழிபொரு ளீகை
யாற்றிக் கேடில வமர்பயன் கூறுது மென்றான். |
| |
சாற்றிக் காட்டிய
தகை நெறி விரும்பி வந்து, ஒரு நாள்
ஏற்றிக் காதலோடு இரும் திருச் செல்வரே வினாவ,
''போற்றிக் கேண்மின் நீர் புகை என ஒழி பொருள் ஈகை
ஆற்றிக் கேடு இல அமர் பயன் கூறுதும்'' என்றான். |
சூசை
சொல்லிக் காட்டிய அறநெறியைக் கேட்டறிய விரும்பி ஒரு
நாள் பெருஞ் செல்வம் படைத்தோர் வந்தனர்; அவ்வுரைகளைக் கேட்டு
அவனைப் போற்றி, செல்வத்தின் பயன் பற்றி அன்போடு வினவினர். சூசை,
''புகை போல் மறையும் பொருளைக் கொண்டு ஈகை செய்து, கேடில்லாது
நிலைக்கும் பயனை அடையும் வழியைக் கூறுவோம். நீங்கள் அதனைப்
பேணிக் கேளுங்கள்'' என்று தொடர்ந்து பேசலானான்.
சூசை
தந்த ஈகை விளக்கம்
-
மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
| 29 |
பொய்த்த
பல்வழிக் கானிடைப் போதல்போன்
பொய்த்த நீருல கின்முரி யாதறம்
வைத்த நல்வழி வாய்ப்பரி தாய்க்கொடை
யுய்த்த நன்முறை முற்பட வோதுவாம். |
| |
|
''பொய்த்த
பல்வழிக் கான் இடைப் போதல் போல்
மொய்த்த நீர் உலகில் முரியாது அறம்
வைத்த நல்வழி வாய்ப்பு அரிது ஆய், கொடை
உய்த்த நல் முறை முற்பட ஓதுவாம்.
|
''பொய்யான
பல வழிகளைக் கொண்ட ஒரு காட்டில் போவது போல்,
திரண்ட கடல் நீர் சூழ்ந்த இவ்வுலகில் கெடாமல் அறம் சார்ந்த நல்வழி
வாய்ப்பது அரிதாகையால், கொடையைச் செலுத்தக்கூடிய நல்ல முறையைப்
பற்றி முதன்முதற் சொல்வோம்.
|