|
பல
வழியுள் எது சரியான வழியென்று புலப்படாமையால், 'பொய்த்த
பல் வழி' எனப்பட்டது.
| 30 |
வெருட
ருங்குரல் வெஞ்சின வேறுமிழ்ந்
திருட ரும்புயல் பெய்தலி லேற்றுவார்
மருட ரும்புகர் மல்கினு மாறிலா
பொருட ருங்கையைப் போற்றுவர் யாருமே |
| |
''வெருள் தரும்
குரல் வெம் சின ஏறு உமிழ்ந்து
இருள் தரும் புயல், பெய்தலில் ஏற்றுவார்.
மருள் தரும் புகர் மல்கினும், மாறு இலா
பொருள் தரும் கையைப் போற்றுவர் யாருமே. |
''அச்சம்
தரும் குரலோடு கொடிய சினமுள்ள இடியை உமிழ்ந்து
இருளையும் தருகின்ற கருமேகம் தமக்கு வேண்டிய மழையைப்
பொழிதலினால் மக்கள் அதனைப் போற்றுவர். அது போலவே, மயக்கம்
தரும் குற்றம் தன்னிடத்துப் பெருகிக் கிடந்தாலும், மறுத்தல் இல்லாமல்
பொருள் தரும் கையை எல்லோரும் போற்றுவர்.
| 31 |
நஞ்சு
நல்லமு தென்றதை நக்கினு
மெஞ்சு நஞ்சமு தாங்கொலி யாவரு
மஞ்சு நேர்கொடை வாழ்த்தலிற் றன்புரை
விஞ்சு வெவ்வினை யிற்றற வீயுமோ. |
| |
''நஞ்சு நல்
அமுது என்று அதை நக்கினும்
எஞ்சு நஞ்சு அமுது ஆம் கொல்? யாவரும்
மஞ்சு நேர் கொடை வாழ்த்தலின், தன் புரை
விஞ்சு வெம் வினை இற்று அற வீயுமோ? |
''நஞ்சு
நல்ல அமுதம் என்று நினைத்துக்கொண்டு அதை நக்கினாலும்
அதனுள் தங்கியுள்ள நஞ்சு அமுதமாய் மாறுமோ? மேகம் போன்ற கொடை
என்று எல்லோரும் வாழ்த்துவதனால், குற்றம் மிகுந்த தன் தீ வினை ஒடிந்து
அறவே அழியுமோ?
|