|
கொடை
தன்னளவில் நல்வினையாயினும், பாவம் இல்லாதவர்க்கே
அது நற்பயன் விளைவிக்கும் என்பது கருத்து. கொல் + யாவரும் என்பது
புணர்ச்சியில் இகரம் பெற்றுக் 'கொலியாவரும்' என நின்றது. கொல் -
வினாப் பொருளில் வந்த இடைச்சொல்.
| 32 |
விஞ்சு
மீகையில் வீண்புகழ் கோடலே
யெஞ்சு வாணிகர் புற்றொழி லென்றலா
னெஞ்சு மாசுற மேற்புகழ் நீவுதற்
கஞ்சு வார்கொடை யாற்பயன் வேண்டுவார். |
| |
''விஞ்சும் ஈகையில்
வீண் புகழ் கோடலே,
எஞ்சு வாணிகர் புன் தொழில் என்று அலால்,
நெஞ்சு மாசு உற மேல் புகழ் நீவுதற்கு
அஞ்சுவர் கொடையால் பயன் வேண்டுவார். |
''மிஞ்சிய
ஈகையின் மூலம் வீணான புகழைக் கொள்ளுதல்
வணிகரிடம் தங்கிக் கிடக்கும் ஈனத் தொழில் முறை என்று கொள்ளப்படுமே
அல்லாமல், கொடையால் தமக்குப் பயன் வேண்டுமென்று கருதுவோர் தமது
நெஞ்சில் மாசு படிந்து கிடக்க மேலே புகழைத் தடவிக் கொள்ள அஞ்சுவார்.
''இம்மைச்
செய்தது மறுமைக்கு ஆமெனும், அறவிலை வணிகன்
ஆய்அலன்'' என்ற புறப்பாடல் (134) இங்கு நினைக்கத்தகும்.
| 33 |
கொடைவ ரும்பயன்
கொண்டுக வர்ந்திடு
மிடைவ ரும்புக ழென்றுயர் நீர்மையா
ருடைவ ரும்பொருள் கள்வர்க்கொ ளித்தென
மிடைவ ருங்கொடை வேய்ந்தில வீவரே. |
| |
''கொடை வரும்
பயன் கொண்டு கவர்ந்திடும்
இடை வரும் புகழ் என்று உயர் நீர்மையார்
உடை வரும் பொருள் கள்வர்க்கு ஒளித்தென
மிடை வரும் கொடை வேய்ந்து இல ஈவரே. |
|