பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 195

''வளர்ந்த பூங் கதிர் மாழ்கிய நெற்கு உயிர்
உளர்ந்த வான் புயல் ஊட்டிய நீர் என,
தளர்ந்த வாழ்க்கையைத் தாங்கி இல்லோர்க்கு இடும்
கிளர்ந்த வான் கொடை கேழ்த்து எழும் ஈகையே.


     ''சிந்திய வானத்து மேகம். வளர்ந்து பூத்த கதிரோடு வாடிய
நெற்பயிருக்கு உயிரூட்டிய நீரைப் போல, தளர்ந்த வாழ்க்கையைத்
தாங்கிய தன்மையாய் எப்பொருளும் இல்லாத வறியவர்க்குக் கொடுக்கும்
நிறைந்த பெருங்கொடையே ஒளியோடு விளங்கும் ஈகை எனத் தக்கது.

 
               36
ஒருகைம் மாறுண ராக்கொடை வான்மிசை
வருகைம் மாறுமுன் வையகத் தாண்டகை
தருகைம் மாறியல் சாற்றிடக் கேண்மீனீ
ரிருகைம் மாறில வேழ்கொடை போற்றியே.
 
''ஒரு கைம்மாறு உணராக் கொடை வான்மிசை
வரு கைம்மாறு முன், வையகத்து ஆண்டகை தரு
கைம்மாறு இயல் சாற்றிட, கேண்மின், நீர்
இரு கை மாறு இல ஏழ் கொடை போற்றியே.''

     ''ஒரு பிரதிபலனும் எதிர்பாராது செய்யும் கொடைக்குப் பயனாகப் பின்
வான் வீட்டில் கிடைக்கும் பிரதிபலனுக்கு முன்னாகவே இம்மண்ணுலகில்
ஆண்டவன் தரும் பிரதிபலனின் இயல்பையும் நான் தொடர்ந்து சொல்வேன்
நீங்களும் இரு கைகளாலும் மாறாமல் எழுச்சியுடன் கொடுத்தலைப்
போற்றுமாறு அதனைக் கேளுங்கள்.''

                தொபீயன் கொடையும் மிடியும்

     -- காய், -- காய், - மா, - மா, -- காய்.

 
              37
முரல்வாய்ச்சங் குளைந்தீன்ற
     முத்துஞ் செந்நென் முத்துமுறழ்
நீரல்வாய்ப்பூங் கமழ்கழனி
     யணிந்த தேன்பூ நிழற்குளிர்த்த