பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 196

குரல்வாய்ப்புட் சோலைநலத்
     தறமுஞ் சீருங் குடிதுஞ்ச
நரல்வாய்ப்பண் கீதமெழுங்
     காலி லேய நாடுளதே.
 
முரல் வாய்ச் சங்கு உளைந்து ஈன்ற முத்தும் செந்நெல் முத்தும் உறழ்
நிரல் வாய்ப் பூங்கமழ் கழனி, அணிந்த தேன் பூ நிழல் குளிர்ந்த
குரல் வாய்ப் புள் சோலை நலத்து, அறமும் சீரும் குடி துஞ்ச,
நரல் வாய்ப் பண் கீதம் எழும் காலிலேய நாடு உளதே.

     காலிலேயே நாடு என்று ஒரு நாடு உளது. அங்கு முழங்கும் வாயை
உடைய சங்கு வருந்தி ஈன்ற முத்தும் செந் நெல்லினின்று பிறந்த முத்தும்
விரவிக் கிடக்கின்ற வரிசை வரிசையான பூ மணங் கமழும் வயல்கள்
உண்டு. அவற்றைச் சூழ்ந்து தேன் மலரும் குளிர் நிழலும் கொண்டு,
பறவைகள் குரலெடுத்துப் பாடும் நல்ல சோலைகள் உண்டு. அறமும்
செல்வமும் அந்நாட்டில் நிலையாகக் குடிகொண்டு துயிலும், யாழினின்று
ஒலிக்கும் கீதம் எங்கும் எழுந்து கேட்கும்.

 
           38
படம்புனைந்த பூஞ்சுனை நன்
     னாட்டின் மூதூர் பார்முகமோ
வடம்புனைந்த மார்பணியோ
     மணியோ வைய வனப்பவிக்குந்
தடம்புனைந்த மணிப்புரிசை
     தழுவு மாடந் தவழ்கொடிசெய்
நடம்புனைந்த நெற்றலிமா
     நகர மாமந் நாட்டணியே.
 

படம் புனைந்த பூஞ் சுனை நல் நாட்டின் மூதூர் பார் முகமோ?
வடம் புனைந்த மார்பு அணியோ? மணியோ? வைய வனப்பு அவிக்கும்
தடம் புனைந்த மணிப் புரிசை தழுவு மாடம் தவழ் கொடிசெய்
நடம் புனைந்த நெற்றலி மா நகரம் ஆம் அந் நாட்டு அணியே.