பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 198

     நம்பி - ஆண்பாற் சிறப்பு பெயர்; ஆண்களிற் சிறந்தவன்.

 
          40
பண்ணழகா மின்குரல்போ
     லழகா நாவிற் பணிச்சொல்லே
விண்ணழகாம் பெய்துளிபோ
     லழகாஞ் சீர்க்கு விளைகொடையே
கண்ணழாங் கண்ணோட்ட
     மென்ன வீயாக் காட்சியொளி
நண்ணழகாந் தவவிளக்குள்
     ளெறிப்பக் கண்டா னடந்தொத்தான்.
 

பண் அழகு ஆம் இன்குரல் போல் அழகு ஆம் நாவில் பணிச்
                                        சொல்லே,
விண் அழகு ஆம் பெய் துளி போல் அழகு ஆம் சீர்க்கு விளை
                                        கொடையே,
கண் அழகு ஆம் கண்ணோட்டம் என்ன, வீயாக் காட்சி ஒளி
நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள் எறிப்பக் கண்டான்; நடந்து
                                        ஒத்தான்.


     யாழுக்கு இனிய குரலே அழகாவது போல் நாவிற்குக் குளிர்ந்த
சொல்லே அழகாகும் எனவும், மேகத்திற்குப் பெய்கின்ற துளியே அழகாவது
போல் செல்வத்திற்கு அதனால் விளையும் கொடையே அழகாகும் எனவும்,
கண்ணுக்கு இரக்கமே அழகாகும் எனவும் தொபீயன் கண்டான்; இவற்றை
யெல்லாம் அழியாத அறிவாகிய ஒளி அடைவதற்குக் காரணமான அழகிய
தவம் என்னும் விளக்கு தன் உள்ளத்தில் ஒளிர்வதனாற் கண்டான்;
கண்டதற்கு ஒத்தபடி நடந்தான்.

 
              41
வீய்வரம்பாங் கோதையினா
     ளுணர்வி லொப்ப விழைந்திருவர்
தீய்வரம்பாம் வினைசெருக்கும்
     மறையி னீழற் செய்தங்க