மின் சுடரப்
பொழி முகில் போல் புற நாட்டு அன்னார் விளக்கு ஆகி,
கொன் சுடரப் பொன் புதையா, விளங்க ஈந்த கொடை மிக்கோர்;
பொன் சுடரச் சுடும் தீப்போல் பொன்றாத் தேவ பொலிவு அருளில்
பின்சுடரப் பல வினையே பெற்றார்; மாட்சி பிரியாதார். |
மின்னல்
ஒளி செய்ய மழை பொழியும் மேகம் போல் அயல்
நாட்டிலும் அவர்கள் ஞான விளக்காகி, வீணே ஒளி செய்து
கொண்டிருக்குமாறு பொன்னைப் புதைத்து வைக்காமல், அது பொலிவுடன்
விளங்கப் பிறர்க்கு ஈந்த கொடையிற் சிறந்தவரானார். பொன் ஒளி
பெறுமாறு அதனைச் சுடும் தீயைப்போல் அவர்கள் அழியாத தெய்வத்
திருவருளில் பொலிவு பெற்று ஒளிருமாறு பின் நாளில் பல துன்பங்களையும்
பெற்றனர். அப்பொழுதும் தம் மாட்சியில் |பிரியாது நிலை பெற்றனர்.
'சுடச்சுடரும்
பொன் போல்' என வள்ளுவர் (267) கூறுவதை காண்க.
| 43 |
ஏமஞ்சா
லீதலிறா
மில்லோ
ரானார் தாதையுநோய்த்
தூமஞ்சால் மூடியகட்
குருட
னானான் றுகளொன்றே
வீமஞ்சால் குறையெண்ணிக்
கைகண்
ணுதவா மெய்யெல்லாங்
காமஞ்சா லருள்வாயாய்க்
கனிய யார்க்கு முதவுவான். |
| |
|
ஏமம் சால்
ஈதலில் தாம் இல்லோர் ஆனார். தாதையும் நோய்த்
தூமம் சால் மூடிய கண் குருடன் ஆனான். துகள் ஒன்றே
வீமம் சால் குறை எண்ணி, கை கண் உதவா, மெய் எல்லாம்
காமம் சால் அருள் வாயாய்க் கனிய யார்க்கும் உதவுவான்.
|
இன்பம்
மிகுந்த ஈகையில் தீவிரமாக ஈடுபட்டுத் தாமும் வறியவர்
ஆனார். தந்தையோ, நோய்வாய்ப் பட்டதோடு, புகை மிகு மூடிய
தன்மையாய்க் குருட்டுக் கண்ணன் ஆனான். ஆயினும், பாவம் ஒன்றே
|