பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 201

பேரச்சம் மிக்க குறை என்று எண்ணி, கையும் கண்ணும் பிறர்க்கு உதவ
இயலாமையால், தன் உடம்பெல்லாம் அன்பால் நிறைந்து அருளைப்
பொழியும் வாயாய் அமையக் கொண்டு, கனிந்த சொல்லால் எல்லோர்க்கும்
உதவுவான்.

     தொபீயன் குருடனான செய்தி ப. ஏ., தோபி. 2 : 9 - 10 காண்க.

 
               44
கான்முகத்து வயிரக்குன்
     றொப்ப நோயிற் கலங்காதான்
வான்மு கத்துத் திருவுளமென்
     றோம்பிப் பொற்சால் வருங்கடனைத்
தேன்மு கத்து மலர்தன்னாட்
     டெய்திக் கொள்கச் சேரினத்துண்
மீன்முகத்து நல்லாளை
     மகற்குச் சேர்க்க விழைவுற்றான்.
 
கால் முகத்து வயிரக் குன்று ஒப்ப நோயில் கலங்காதான்
வான் முகத்துத் திரு உளம் என்று ஓம்பி, பொன் சால் வரும் கடனைத்
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்திக் கொள்க, சேர் இனத்துள்
மீன் முகத்து நல்லாளை மகற்குச் சேர்ப்ப விழைவு உற்றான்.

     காற்றின்முன் வயிரக் குன்று அசையாமைபோல் துன்பங்களிடையே
கலங்காத தொபீயன் அது வானத்திலுள்ள ஆண்டவன் திருவுளமென்று
பேணி, தேனைத் தாங்கிய மலர்கள் நிறைந்த தன் நாட்டுக்குப் போய்
மிகுந்த பொன்னாய் வர வேண்டிய கடனைக் கேட்டுப் பெறவும், தன்
மகனுக்குத் தன்னைச் சேர்ந்த இனத்தாரிடையே விண்மீன் போன்ற
முகமுள்ள ஒரு நல்ல பெண்ணை மனைவியாகச் சேர்க்கவும் விருப்பங்
கொண்டான்.

 
             45
பூமுற்று முகத்தார்வம்
     புனைநெஞ் சானென் றசரீயன்
காமுற்று வந்துணர்ந்த
     நிலையி னம்பி கைகூட்டி