பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 202

     னேமுற்று மணமுற்று
மீள்வா மென்ன விருகுரவர்
     தாமுற்று களியில்விடத்
தனையன் போற்றித் தடங்கொண்டான்.
 
பூ முற்று முகத்து ஆர்வம் புனை நெஞ்சான் என்று அசரீயன்
காம் உற்று வந்து, உணர்ந்த நிலையின், ''நம்பி கை கூட்டின்,
ஏம் உற்று, மணம் உற்று, மீள்வாம்'' என்ன, இரு குரவர்
தாம் முற்று களியில் விட, தனையன் போற்றித் தடம் கொண்டான்.

     பூவின் அழகு முதிர்ந்த முகத்தோடு அன்பு புனைந்த நெஞ்சை
உடையவன் என்று பார்த்ததுமே சொல்லக் கூடிய அசரீயன் என்ற ஒருவன்
ஆசையோடு அதற்கு முன் வந்தான். தான் வந்ததை உணர்ந்த நிலையில்,
'இச்சிறந்த மகனை என் கையில் ஒப்படைத்தால், பொன்னையும் பெற்று,
மணமும் முடித்து, இருவரும் மீள்வோம்' என்றான். அது கேட்ட இரு
பெரியோரும் முதிர்ந்த களிப்போடு மகனை அனுப்பி வைத்தனர். மகன்
பெற்றோரைப் போற்றி அசரீயனோடு வழி நடந்தான்.

     காமம், ஏமம் என்பன இடைக்குறையாய்க் காம், ஏம் என நின்றன.

                     தயோதரன்

     - சார்மி திருமணம் - விளம், - விளம், - மா, கூவிளம்

 
                46
நம்பியுந் துணையுமே கையு நாட்டமுங்
கம்பியுங் குரன்மணிக் கலனும் போற்றமுட்
பம்பியும் விளைத்ததீம் பணியி னல்லற
மும்பியும் படர்வழி யுவந்து போயினார்.
 
நம்பியும் துணையுமே கையும் நாட்டமும்
கம்பியும் குரல் மணிக் கலனும் போல், தம் உள்
பம்பியும், விளைத்த தீம் பணியின் நல் அறம்
உம்பியும், படர்வழி உவந்து போயினார்.