|
சிறந்த
மகன் தயோதரனும் துணைவனாகிய அசரீயனும் கையும்
கண்ணும் போலவும், பொற்கம்பியும் ஒலிக்கும் மணிகளை அதனில் கோத்த
அணிகலன் போலவும் தம்முள் நெருங்கியும், தாம் மேற்கொண்ட இனிய
பணியினிடையே நல்லற உணர்வுகளை எழுப்பியும், செல்லும் வழியில்
மகிழ்ந்த வண்ணம் போயினர்.
| 47 |
திரைவளர்
தீம்புனற் சென்று தேமலர்க்
கரைவளர் நிழலுறீஇக் கவின்கொ ணம்பிமேற்
புரைவளர் வினையெனப் புழுங்கோர் மீன்வர
விரைவளர் தாரினான் வெருவி விம்மினான். |
| |
திரை வளர் தீம்
புனல் சென்று, தேன் மலர்க்
கரை வளர் நிழல் உறீஇக் கவின் கொள் நம்பி மேல்,
புரை வளர் வினை எனப் புழுங்கு ஓர் மீன் வர,
விரை வளர் தாரினான் வெருவி விம்மினான். |
திரை
எழுகின்ற இனிய நீருள்ள ஆற்றை அடைந்து, தேன் நிறைந்த
மலர்ச் செடிகள் கொண்ட கரையையொட்டி அமைந்து கிடந்த நிழலை
அடைந்து அழகுடன் நின்ற சிறந்த மகனை நோக்கி, பாவம் வளர்த்த
வினைப் பயன் போல் சினந்த மீன் ஒன்று பாய்ந்து வரக் கண்டு, மணம்
பொருந்திய மாலையை அணிந்த அம்மகன் அஞ்சி அழுதான்.
'தீம்புனல்'
என்றதனால் 'திரை' கடலுக்குச் சேராதாயிற்று.
| 48 |
மேவிய துணையவன்
மீனைக் கொன்றுபின்
னேவிய முறையதன் பித்து மீரலுந்
தீவிய மருந்தென வெடுத்துச் செல்வயர்ந்
தாவிய நாட்டெழி லணுகி யெய்தினார். |
| |
மேவிய துணையவன்
மீனைக் கொன்று, பின்
ஏவிய முறை அதன் பித்தும் ஈரலும்
தீவிய மருந்து என எடுத்து, செல்வு அயர்ந்து,
ஆவிய நாட்டு எழில் அணுகி எய்தினார். |
துணையாய்
அமைந்த அசரீயன் அம்மீனைக் கொன்று, பின் ஏவியபடி
தயோதரன் அதன் பித்தத்தையும் ஈரலையும் திவ்விய மருந்தாகுமென்று
|