|
எடுத்துக் கொண்டு,
அவ்விருவரும் வழிச் செல்லுதலை மேற்கொண்டு, தாம்
நாடிய நாட்டை அழகுடன் அணுகிச் சென்று சேர்ந்தனர்.
| 49 |
வள்ளலின்
மகனென மகிழ யாவருங்
கொள்ளலி னுவர்ப்பில கடன்கைக் கொண்டபின்
ளெள்ளலின் மரபினா ளியையு மன்றலை
யுள்ளலின் முகலிமா நகருற் றரரோ. |
| |
வள்ளலின் மகன்
என மகிழ யாவரும்
கொள்ளலின், உவர்ப்பு இல கடன் கைக்கொண்ட பின்
எள்ளல் இல் மரபினாள் இயையும் மன்றலை
உள்ளலின், முகலி மா நகர் உற்றார் அரோ. |
கொடையாளியின்
மகன் என்று எல்லோரும் தயோதரனை
மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டமையால், வெறுப்பிற்கு இடமின்றிக்
கொடுத்த கடனை மீட்டுக் கொண்டபின், இகழ்ச்சி இல்லாத குடியைச்
சேர்ந்த பெண்ணோடு பொருந்தும் திருமணத்தை நினைந்து
கொண்டமையால், முகலி என்னும் பெரிய நகரத்தை அடைந்தனர்.
| 50 |
மதியக டுரிஞ்சிய
கொடியின் மாடநீ
ணிதியக டார்கொடை நிவல னோன்றுதேன்
புதியக டாரணிப் பொற்பி லீன்றவப்
பதியக டிணையிலாச் சார்மிப் பாவையே. |
| |
மதி அகடு உரிஞ்சிய
கொடியின் மாடம், நீள்
நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று, தேன்
புதி அகடு ஆர் அணிப் பொற்பில் ஈன்ற அப்
பதி அகடு இணை இலாச் சார்மிப் பாவையே. |
மதியின்
வயிற்றை உராய்ந்து ஆடும் கொடியை உடைய மாளிகையில்
வாழ்த்து, தன் நெடிய செல்வத்தைக் கொண்டு வறியவர் வயிற்றுக்கு
உணவூட்டும் கொடைச் சிறப்புள்ள நிவலன் என்பவன் தவம் புரிந்து, புதிய
தேனைத் தன் உள்ளிடத்துக் கொண்ட மாலையின் அழகோடு பெற்றெடுத்த
பாவை போன்ற பெண் அந்நகரத்தினுள் தனக்கு யாரும் இணையில்லாத
சார்மி என்பவளே ஆவாள்.
|