| 53 |
தந்துயர்
மூவருந் தகைப்ப வன்றவர்
வந்துயர் மணிக்கொடி மன்றற் கேட்டலு
நொந்துயர் கிளையரை நிவல னோக்கிமுன்
வெந்துயர் விளைத்தபேய் வினவி ளம்பினான். |
| |
தம் துயர் மூவரும்
தகைப்ப அன்று அவர்
வந்து, உயர் மணிக் கொடி மன்றல் கேட்டலும்
நொந்து, உயர் கிளையரை நிவலன் நோக்கி, முன்
வெந் துயர் விளைத்த பேய் வினை விளம்பினான். |
இவ்வாறு
வருந்திய மூவரும், அன்று தயோதரனும் அசரீயனுமாகிய
அவ்விருவரும் தமது துயரத்தைத் தடுப்பது போல் வந்து, உயர்ந்த
மணிக்கொடி போன்ற மகளை மணம் கேட்டதும் நொந்தனர். நிலவன் தனது
உயர்குடி உறவினராகிய அவர்களை நோக்கி, முன் கொடுந்துயர்
விளைவித்த பேயின்செயலை எடுத்துக் கூறினான்.
| 54 |
பேய்வளர்
வினையெலாம் பெயர்ப்ப னானெனத்
தீய்வளர் குரவருட் சிறந்து நேர்தலாற்
போய்வளர் கோலமிட் டரிவை பொற்புறீஇ
மீய்வளர் மலர்க்கொடி பூத்து வேய்ந்ததே. |
| |
''பேய் வளர்
வினை எலாம் பெயர்ப்பன் நான்'' என,
தீய் வளர் குரவர் உள் சிறந்து நேர்தலால்,
போய் வளர் கோலம் இட்டு அரிவை பொற்பு உறீஇ,
மீய் வளர் மலர்க் கொடி பூத்து வேய்ந்ததே. அசரீயன், |
''பேயினால்
வளரும் தீங்கையெல்லாம் நான் நீக்குவேன்'' என்றதும்,
மனத்தில் துன்ப நெருப்பு வளர்ந்து கொண்டிருந்த பெரியோர் இருவரும்
மனம் மகிழ்ந்து இசைந்தனர். அதனால், உள்ளே போய்ச் சிறந்த
மணக்கோலம் இட்டுப் பெண்ணை அழகுபடுத்தினர். அக்கோலம்
மேல்நோக்கி வளர்ந்த மலர்க்கொடி பூத்து மூடிக்கொண்டது போல்
இருந்தது.
தீ,
மீ என்பன தீய், மீய் என விரித்தல் விகாரம் பெற்றன.
|