|
அதுவே குணமென்று நாட்டுவதற்கு,
வாய் துடிக்கும் விருப்பத்தை மறைத்து
அரசன் நடுவுநிலையாளன் போற் பேசாதிருக்க, திரும்பவும் அந்த மாதியன்
தீவினை விளைவதற்கான மயக்க மொழிகளை விரிக்கத் தொடங்கினான்.
இங்கு
நீதியைக் கொல்வோர் மூவகையார்: அநீதியை நீதியெனத்
தாங்கி ஓங்கிப் பேசும் 'பலர்'; அநீதியை அநீதியென்று பேசாது அடங்கி
யிருக்கும் 'சிலர்'; அநீதியின் கண் நடுவுநிலைமை வகிக்கும் 'அரசன்'.
கூறிய - 'கூற' எனப் பொருள்படும் 'செய்யிய' என்னும் வாய்பாட்டு
வினையெச்சம், நவிலா - 'நவிலாது' என்ற எதிர்மறை வினையெச்ச ஈறு
கெட்டது.
| 35 |
திருந்த
வாய்ந்தறந் திறம்பிலாச் செய்யினு மெவர்க்கும்
பொருந்த வாற்றுவர் பூவுல குண்டுகொல் மன்ன
வருந்த வாம்பலே மனமகிழ் முளரிவாய் மலரு
மிகுந்த மாயிரு ளீர்த்தவோ ரிரவியின் முகத்தே. |
| |
"திருந்த ஆய்ந்து
அறம் திறம்பு இலா செய்யினும், எவர்க்கும்
பொருந்த ஆற்றுவர் பூவுலகு உண்டுகொல்? மன்ன,
வருந்த ஆம்பலே, மனம் மகிழ் முளரி வாய் மலரும்
இருந்த மாஇருள் ஈர்த்த ஓர் இரவியின் முகத்தே. |
"திருத்தமாய்
ஆராய்ந்து அறநெறிக்கு மாறுபடாமல் ஒரு காரியத்தைச்
செய்யினும், எல்லோருக்கும் பொருந்துமாறு அதனைச் செய்து முடிப்பார்
இப்பூவுலகில் உண்டோ? மன்னனே, உலகமெங்கும் மூடிக்கிடந்த மிக்க
இருளை இழுத்துச்சென்ற ஒரு கதிரவனின் எதிரேயும் ஆம்பல் வருந்தி
வாய் மூடிக்கொள்ளும். மனம் மகிழ்ந்த தாமரையோ வாய் மலரும்.
இலா
- 'இலாது' என்பதன் ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம்.
கொல் - வினாப் பொருளில் வந்த இடைச்சொல்.
|